Monday, April 29, 2024
Homeநிதிஅவசர கால நிதி 

அவசர கால நிதி 

அவசர கால நிதி 

அவசர கால நிதி என்பது  3 முதல் 6 மாதம் உங்களுக்கு  தேவையான பணத்தை தனியாக ஒதுக்கி வைப்பதாகும் அல்லது சேமிப்பாகவும் கருதலாம் . ஏன் நான் இதை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படலாம் காரணம், இப்போது நிறைய மக்கள் தங்கள் சேமிப்பை வங்கியில் பணமாகவும் சிலர் தங்கமாகவும் , வெகு சிலர் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு வேறு சேமிப்பு வேறு என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

சரி இப்போது இதை எப்படி தொடங்குவது பற்றிய ஒரு முன்னோட்டத்தை பார்க்கலாம். நீங்கள் இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் தங்கள் சம்பளத்தில் இருந்து இதற்கென்று ஒதிக்கிட வேண்டும் அது சிறிய தொகையாய் இருந்தாலும் பரவாயில்லை, அது உங்கள் இலக்கை அடைய செய்யும், அதற்கு சிறிது பொறுமையும் சரியான திட்டமிடல் மட்டும் தேவை.

சிறு சிறு சேமிப்பு இலக்குகளை அமைத்தல் 

ஆரம்பத்தில் இருந்தே தங்களின் குறிக்கோளை அடைய சிறு சிறு இலக்குகளாக பிரித்து கொள்ளுங்கள் . எடுத்த உடனே மூன்று மாத தொகையை இலக்காக வைக்காதீர்கள் மாறாக ஒரு மாதமோ அல்லது இரண்டு வாரமாக சிறிய இலக்கை நிர்ணயுங்களே. முதல் இலக்கு எப்பாதுமே உங்களால் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் .

நீங்கள் முதல் இலக்கை அடைந்துவிட்டாலே அதுவே உங்களுக்கு மிக பெரிய உந்து சக்தியாக மாறும் .

அடுத்த இலக்கு முன்பை விட சற்று அதிகரித்திருக்க வேண்டும்  …. அதற்கடுத்து கொஞ்சம் கடினமாக வேண்டும் (சேமிக்கும் அளவை உயர்த்தி கொள்ளலாம் ) இதே மாதிரி தொடர்ந்தாள் பெரிய இலக்கை அடைய முடியும். ஒரு பெரிய இலக்கை வைப்பதற்கு பதிலாக சிறுசிறு இலக்காக வைத்தால் அதன் கடினத்தன்மை தெரியாது மாறாக அதனால் பெறப்படும் வெகுமதியும் அதிகமாக இருக்கும் .

பிரத்யோகமாக தனி சேமிப்பு கணக்கை நிர்வகித்தல் 

நாம் அவசரகால நிதி தேவைக்காக சேமிக்க ஆரம்பிக்கும்போது முதலில் அதற்கென்று தனியாக ஒரு கணக்கை உருவாக்க வேண்டியது கட்டாயம், ஏனென்றால் உளவியல் ரீதியாக அது செலவு செய்யவதை கட்டுப்படுத்தும். இந்த பணம்  தனி அக்கவுண்டில் இருப்பதனால் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக உங்களிடமிருந்து பாதுகாக்கப்படும்.

அதேபோல் உங்களுடைய அக்கவுன்ட் ATM Card ல் இணையாதவாறு வைத்திருப்பது சிறப்பு ஏனென்றால் பணத்தை நினைத்த நேரத்தில் கண்டபடி, ஆசை இருந்தாலும் செலவு செய்ய முடியாமல் போகலாம் இதனால் உங்கள் தேவையற்ற செலவு தவிர்க்கப்படும்.

தானாக பணம் அனுப்புதல்

உங்கள் தனிப்பட்ட அக்கவுண்டில் இருந்து அவசரகால நிதிக்கு மாதம் மாதம் தானாக பணம் செல்லுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் . இது மாதம் வருமானம் பெறுவோருக்கு பேருதவியாக இருக்கும் ஒருவேளை நீங்கள் மறந்தாலும் பணம் தானாக சென்றுவிடும் . இந்த பிடித்தமானது உங்களுக்கான செலவாக்கவே நீங்க பார்க்கவேண்டும். இதன்மூலம் உங்கள் சேமிப்பின் இலக்கை அடைய ஒரு திறவுகோலாக அமையும் . நீங்கள் மாதம் ஒரு செலவுக்கான ரசீதை கெ டுவதுபோல் இதை நினைத்து செய்தால் பணத்தை நிச்சயம் சேமிக்க முடியும்.

கூடுதல் பணத்தை சேமிப்பது எப்படி 

உங்கள் நிதி வளர்வதை வேடிக்கை பார்த்துகொண்டிராமல் கூடுதல் பணத்தை சேர்த்து வேகமாக இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். தள்ளுபடிகள், பணி இடத்தில் கிடைக்கும் போனஸ் போன்றவற்றை செலவு செய்யாமல் சேமிப்பின் பக்கம் திருப்பி விடவேண்டும்.

அல்லது இதில் ஒருபகுதியாவது எடுத்து சேமிப்பில் இட வேண்டும். தங்களின் கிரெடிட் கார்டு பில்லோ அல்லது எதாவது கடனின் தவணை முறை முடிந்தாலோ அதற்கடுத்த மாதத்திலும் அந்த பணத்தை அவசரகால நிதிக்கு மாற்றிவிடலாம், இது உங்களுக்கு பெரும் பாரமாக இருக்காது.ஏற்கனவே செலுத்திய தொகைக்குமேல் கூடுதலாக சேமிப்பதன் மூலம் வேகமாக தங்களின் இலக்கை அடைய முடியும்.

பட்ஜெட்டை கவனித்தல் 

மாதம் பட்ஜெட்டை தொடர்ந்து கவனிக்க வேண்டும். தங்களின் செலவீனங்களை கவனித்து அதில் ஏதேனும் சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியுமா என்று ஆராய வேண்டும். உங்களின் நிதி நிலைமை பற்றி இது சரியானதுதானா என்று உங்களிடமே நீங்கள் கேட்க வேண்டும். 100 ரூபாய் செலவு செய்யும் இடத்தில் 15 ரூபாய் செலவை குறைக்க முடியுமா என்று தேட வேண்டும். இதுபோன்ற மதிப்பாய்வை அவ்வப்போது செய்து பார்க்கும் போது சேமிப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம் .

  • பெரும்பாலும் வீட்டில் உணவை சமைத்து உண்ணலாம்
  • மளிகை பொருட்களின் தள்ளுபடியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் 
  • செலவின் திட்டமிடல் மிக முக்கியமானது 
  • கிரெடிட் கார்டு வட்டி விகிதத்தை முகவரிடம் பேசி குறைக்க முயற்சிக்கலாம் (கூடுமானவரை கிரெடிட் கார்டு போன்றவற்றை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது ஏனென்றால் உங்கள் சேமிப்பின் வேகத்தை இது குறைக்கலாம்)
  • பொது போக்குவரத்தை பயன்படுத்த முன் வரவேண்டும்.

தங்களிடம் மிச்சமான நேரத்தில் உங்கள் திறன்களை பணமாக மாற்ற முயற்சிக்கலாம்   எ .க)சிறுதொழில், ஆன்லைன் சிறு வேலைகள் போன்றவற்றின் மூலமும் சில வரவுகள் வரவைக்க முயற்சிக்கலாம்.

அவசரகால நிதியை அவசரகாலத்தில் மட்டும் பயன்படுத்துங்கள் 

பணம் சேமிப்பாகிவிட்டது எனவே கொஞ்சம்  மட்டும் ஆசைக்காக செலவு செய்யலாம் என்ற எண்ணம் அறவே வரக்கூடாது. குறிப்பாக விடுமுறைக்காலம், சினிமா , சுற்றுலா மற்றும் தேவையற்ற மின்னணு பொருட்களை வாங்க நாட்டம் கொள்ளக்கூடாது. அவசரநிலை ஏற்படாதவரைக்கும் அந்த பணத்தின் மீது கை வைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும் . இந்த ஒரு முறை மட்டும் எடுத்து கொள்ளலாம் என்று நினைத்தால் அதுவே தொடர்கதையாகி உங்கள் சேமிப்பு கரைந்துவிட வாய்ப்புள்ளது.

எதற்காக இந்த நிதியை நாம் உருவாக்கி வைத்துள்ளோம்; 6மாத தேவைக்காக இருப்பு வைத்துள்ள இந்த பணமானது வேலை இழந்தாலோ, திடீர் விபத்து அல்லது மருத்துவத்துக்கோ , பெருந்தொற்று போன்ற நாட்களை சமாளிக்க பேருதவியாகவும் யாரையும் சார்ந்திருக்காமல் தனியாக நிற்க உதவும்.

இதை உருவாக்குவது கடினமானதுதான் அனால் ஒவ்வொரு தனிநபரும் இதை செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் , யாருக்கு எப்போது என்ன நேரும் என்பது தெரியாமல் உள்ளது. சேமிப்பில் உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தால் அனைவராலும் செய்யக்கூடியதே 

குறிப்பு.)தங்களின் நிதி ஆலோசகரிடம் ஒரு முறை கருத்தை கேட்கவும் ஏனென்றால் சிலருக்கு கடன் பிரச்சனையும் இருக்கலாம், அது அவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments