Upcoming IPO companies list April 2024 India

Upcoming IPO Companies Open/Close Date Listing Date Price band (₹) Lot Size Exchange
Emmforce Autotech Limited IPO Apr 23 – Apr 25 Apr 30, 2024 93 to 98 1,200 BSE SME
JNK India Limited IPO Apr 23 – Apr 25 Apr 30, 2024 BSE, NSE
Varyaa Creations Limited IPO Apr 22 – Apr 25 Apr 30, 2024 150 1,000 BSE SME
Faalcon Concepts Limited IPO Apr 19 – Apr 23 Apr 26, 2024 62 2,000 BSE SME
Vodafone Idea Limited FPO Apr 18 – Apr 22 Apr 25, 2024 10 to 11 1,298 BSE, NSE
Ramdevbaba Solvent Limited IPO Apr 15 – Apr 18 Apr 23, 2024 85 1,600 NSE SME
Grill Splendour Services Limited IPO Apr 15 – Apr 18 Apr 23, 2024 120 1,200 NSE SME
Greenhitech Ventures Limited IPO Apr 12 – Apr 16 Apr 22, 2024 50 3,000 BSE SME
upcoming ipo in indian stock market
upcoming ipo in indian share market

IPO என்றால் என்ன?

ipo என்பது INITIAL PUBLIC OFFERINGன் சுருக்கமாகும். ஒரு நிறுவனமானது தங்களின் பங்குகளை பங்குச்சந்தையில் வெளியீடுவதற்கு முன், Private to public பொது நிறுவனமாக மாற்றப்படுகிறது. பங்குச்சந்தை பரிவர்த்தனை வாரியம் SEBI வழிகாட்டுதலின் படி DRHP மற்றும் RHP பைலிங் செய்து கடைசியாக SEBI அதனை ஒப்புதல் மற்றும் உறுதி படுத்திய பின்பே IPOற்கு நிறுவனமானது தயாராகும். அந்த நிறுவனமானது RHP தாக்கலின் போதே UPI அல்லது ASBA வடிவத்தின் மூலம் IPO ல் முதலீடு செய்வதற்கான விலையும் தேதியையும் நிறுவனத்தால் தீர்மானிக்கப்படுகிறது .

பல நிறுவனங்கள் ஏன் ஐபிஓ(ipo) மூலம் பொதுவில் செல்கின்றது?

ஐபிஓ மூலம் ஒரு நிறுவனம் பங்குசந்தைக்கு வருகிறது என்றால் அதற்கு மூல மற்றும் முதன்மையான காரணம் நிதி திரட்டுவதாகும். ஒரு நிறுவனம் எதற்காக நிதி திரட்டுகிறது

  • ஒரு புதிய திட்டத்திற்கு நிதியளித்தல்
  • கடனைத் திருப்பிச் செலுத்துதல்
  • வணிகத்தை விரிவுபடுத்துதல்
  • ஆரம்பகால முதலீட்டாளர்கள் வெளியேறுதல்

போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரு நிறுவனத்திற்கு நிதி தேவைப்படுகிறது. நிறுவனம் விரிவுபடுத்துவதற்கு பெரும் பணம் தேவைப்படும் அதை தனி முதலீட்டார் மூலமாகவோ அல்லது வங்கி மூலமாகவோ பூர்த்தி செய்யமுடியாது எனவே பங்குச்சந்தையில் ipo மூலமாக பல கோடி ரூபாய்களை முதலீடாக பெற்று மேற்கொண்ட நிறுவனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

IPO மூலம் முதலீடு செய்வதன் நன்மைகள் யாவை?

  • அதிகப்படியான லாபத்திற்கு வாய்ப்பு
  • ஆரம்ப நிலை முதலீட்டுக்கான பயன்கள்
  • நன்கு அறியப்பட்ட நிறுவனங்களில் மக்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு
  • பங்குதாரர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்இன்னும் பல மறைமுக நன்மைகள் முதலீட்டாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் IPO முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும்.

IPO முதலீட்டின் அபாயங்கள் என்ன?

  • நிறுவனத்தின் தரவுகள்(Data) பற்றாக்குறை 
  • சந்தையின் ஏற்ற இறக்கம் – முதலீட்டாளரின் எண்ணம், நிறுவனத்தின் செய்தி போன்ற பல காரணத்தினால் நீங்கள் வாங்கியவுடன் இறங்கவும் வாய்ப்பு உள்ளது.
  • மிகை செய்யப்பட்ட மதிப்பீடு (Overvaluation)
  • தொழில் மற்றும் நிறுவனம் சார்ந்த அபாயங்கள் அறியாமை 
  • Listing gain காண பேராசை 

IPOல் முதலீடு செய்வதற்குமுன் நினைவில் கொள்ள வேண்டியவை யாவை?

  • நிறுவனத்தின் அடிப்படைகள் – வணிக மாதிரி , வருவாய் , லாபம், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் அதன் தொழில்துறையில் உள்ள போட்டிபோன்றவற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.
  • தொழில் மற்றும் சந்தை – எதிர்காலத்தில் அதன் தொழிலுக்கான சூழல் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி 
  • நிறுவனத்தின் மேலாண்மை(Management) குழு பற்றிய விபரம்
  • விலை மதீப்பீடு சரியானதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும், அதிக விலை கொண்ட IPOகளை  தவிர்ப்பது நன்று 
  • Lockup Periods – ஏற்கனவே உள்ள ஆரம்பகால முதலீட்டாளர்கள் தங்கள் பங்கினை விற்பனை செய்கிறார்களா என்பதை அறியவேண்டும். இது IPO ற்கு பிறகு பங்கின் ஏற்ற இறக்கத்தை பாதிக்கும்.