Monday, April 29, 2024
Homeபொருளாதரம்சம்பள உயர்வு கிடைத்தவுடன் அந்த பணத்தை என்ன பண்ணலாம்?

சம்பள உயர்வு கிடைத்தவுடன் அந்த பணத்தை என்ன பண்ணலாம்?

ஒரு நிதியாண்டு(Financial Year) முடிந்தவுடன் அநேக நிறுவனங்களில் அங்குள்ள ஊழியர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கொடுப்பார்கள். அதை  நாம் எவ்வாறு பயனுள்ளதாக மாற்றவேண்டும் என்பதை இங்கு காண்போம்.

சம்பள உயர்வு

புதியதாக சம்பள உயர்வு கிடைத்தவுடன் அந்த பணமானது நம்மை அதிகப்படியாக செலவு செய்ய தூண்டும். புதிய அல்லது ஆடம்பர பொருள் வாங்குவதாககட்டும், பயணங்கள் மேற்கொள்ளவதாகட்டும் மற்றும் நண்பர்களுடன் சுற்றுவதற்கும் பெரும்பாலோனோர் விரும்புவோம். இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை ஆனால் தள்ளி போட முயற்சிக்கலாம் அல்லது சிறுபகுதியை மட்டும் செலவு செய்யலாம்.

செலவை கட்டுப்படுத்துவது எப்பட?

செலவு செய்யவதை கட்டுப்படுத்துவது சவாலான காரியம் தான் ஆனால் அதை கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன.

  • நீங்கள் எந்த விடயத்திற்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு செலவு செய்கிறீர்கள் என்பதை அறிந்து அவற்றை தடுக்க முயற்சி செய்யுங்கள்.
  • உங்களுக்கு செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், ஒரு நாள் அல்லது ஒரு வாரம் என குறிப்பிட்ட காலத்திற்கு அதை வாங்குவதை தள்ளி போடவும், இதன்மூலம் அந்த பொருள் மதிப்புடையதா, நமக்கு அது மிகவும் அவசியமானதா என்பதை தெரிந்து கொள்ள அவகாசம் கிடைக்கும்.
  • பணத்தை ரொக்கமாக பயன்படுத்தவும், இதனால் உங்கள் பையில் இருந்து பணம் விரயமாகும் போது நீங்கள் கட்டாயம் அதை தடுக்க முயற்சிப்பீர்கள்.

கடன் அடைத்தல் மற்றும் விரைவாக கடனை அடைப்பது எப்படி?

ஒருவரின் தனிப்பட்ட நிதி நிலைமை மற்றும் அவர் செலுத்த வேண்டிய கடனின் அளவைப் பொறுத்து காரணிகள் மாறுபடலாம்,  இருப்பினும், கடனை விரைவாகச் செலுத்த உதவும் சில பொதுவான குறிப்புகள் இங்கே உள்ளன.

  • உங்கள் மாத செலவு பட்டியலில் கட்டாயம் கடனை திருப்பி செலுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு அவசியம்.
  • செலவுகளை குறைத்தல்: தேவை இல்லாத சந்தாக்கள் மற்றும் அடிக்கடி வெளியே சென்று சாப்பிடுவது போன்றவற்றை கட்டுப்படுத்துங்கள் 
  • உங்கள் கடனை அடைப்பதற்க்காக நீங்கள் பகுதி நேரவேலை மற்றும் கூடுதல் வருவாய் ஈட்ட கவனம் செலுத்துவது அவசியம்.
  • Debt Snowball Methodஐ  முயற்சிக்கலாம், சிறிய கடனிலிருந்து ஆரம்பித்து படி படியாக பெரிய கடனை அடைக்க  முயற்சிக்கலாம். இது மனரீதியாக உங்களுக்கு உத்வேகம் தரும்.

இதை செய்யவது கடினமாக இருந்தாலும் பொறுமையாக இதை கடைபிடித்தால் விரைவாக கடனை அடைப்பதில் வெற்றி பெறலாம்.

increment vs spending
increment vs spending

அவசரகால நிதி (Emergency Fund)

ஒரு சாமானியன் அவசரகால நிதியை உருவாக்குவது என்பது சவாலான காரியமாகும். அது அவனை எதிர்பாராத பொருளாதார இடையூர்களில் இருந்து காக்கும்.

உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை முன்கூட்டியே முடிவு செய்யுங்கள். உங்கள் அவசரகால நிதி  குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதத்திற்கான அன்றாட  செலவுகளைச் பூர்த்தி செய்யுமாறு அமைய வேண்டும். அதில்  வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை ஈடுகட்ட போதுமான பணம் இருக்க வேண்டும்.

அவசரகால பணத்தை சேமிக்க நல்ல வட்டிவிகிதம் தரக்கூடிய வங்கி அல்லது தரமான நிதி நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்.

உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாக உங்களது அவசரகால சேமிப்பு கணக்கிற்கு குறிப்பிட்ட தொகையானது மாதா மாதம் தானாக செலுத்தும்படி செய்யவேண்டும். இது பணத்தை தொடர்ந்து சேமிக்கவும் தேவையில்லாத செலவுகளை குறைக்கவும் வழிவகுக்கும்.

உங்கள் மற்ற செலவுகளை காட்டிலும் அவசரகால நிதிக்கு முன்னுரிமை கொடுங்கள், அதில் நீங்கள் சமரசம் அடைய வேண்டாம்.

உங்கள் ஆரம்ப இலக்கை அடைந்தவுடன் சேமிப்பின் இலக்கை சற்று உயர்த்தி மாற்றியமைக்க வேண்டும், இது மிகவும் முக்கியமானதாகும்.

மேலும் விரிவாக தெரிந்துகொள்ள :https://mamsai.com/finance/emergency-contingency-fund-tamil/

வரி சேமிப்பும் முதலீடும்

இந்தியாவில் பல வரிசேமிப்பு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. அவை உங்கள் வரிக்குரிய வருமானத்தைக் குறைக்கவும், வரிகளைச் சேமிக்க உதவும், இந்தியாவில் மிகவும் பிரபலமான சில வரி சேமிப்பு முதலீடுகளை இப்போது காணலாம்.

Public Provident Fund (PPF): PPF என்பது நீண்ட கால முதலீடும் நிலையான வட்டிவிகிதமும் தரகூடிய ஒரு திட்டமாகும். PPFல் ஆண்டுக்கு 1.5 லட்சம், மற்றும் முதலீடு வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம் 

Equity-Linked Savings Scheme (ELSS): ELSS என்பது ஒரு  mutual fund திட்டமாகும், இது பங்குச்சந்தையில் முதன்மையான பங்குகளில் முதலீடு செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பிரிவு 80Cயின் கீழ் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் மூன்று வருட Lock-in காலம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இத்திட்டமானது மற்ற வரி சலுகை திட்டங்களை விடவும் அதிக லாபம் தரும் திறனுடையது.

National Pension System (NPS): NPS என்பது அரசு ஆதரவு பெற்ற ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும், இது பிரிவு 80CCDயின் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது.  இது equity மற்றும் அரசின் பெரும்நிறுவனங்களின் கடன் பத்திரத்திலும் முதலீடு செய்ய அனுமதிக்கிறது. மேலும்,உங்கள் ஓய்வுக்குப் பிறகுதான் இதன் முதலீட்டை திரும்பப் பெற முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Tax-saving fixed deposits: சில வங்கிகள் இது போன்ற திட்டங்களை வைத்துள்ளது, ஆனால் அவை ஐந்தாண்டு  Lockin  காலம் கொண்டவை மற்றும் பிரிவு 80Cயின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவையாகும்.

“நினைவில் கொள்ளுங்கள், எந்தஒரு வரி சேமிப்பு முதலீட்டில் முதலீடு செய்வதற்கு முன் உங்கள்  நிதி ஆலோசகர் அல்லது வரி நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.”

புதியவை கற்றல் 

உங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தவுடன் புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஒரு குறிப்பிட்ட சிறிய தொகையாவது ஒதுக்க முயற்சிக்க வேண்டும். இது உங்கள் தொழிலிலோ அல்லது வேலையிலோ உங்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும்.

நீங்கள் கற்றுக்கொண்ட புதிய திறமையினை பயன்படுத்தி அதிலிருந்தும் வருவாய் ஈட்ட முயற்சிப்பது மேலும் உங்கள் நிதிநிலைக்கு வழு சேர்க்கும்.

மருத்துவ காப்பீடு

மருத்தவ காப்பீடு திட்டத்தில் பல நன்மைகள் உள்ளன. அவற்றில் சில நன்மைகளை இப்போது காணலாம். 

  • ஏறிவரும் மருத்துவ செலவில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள மருத்துவ காப்பீடு என்பது இன்று அவசியமாகிறது.
  • நீங்கள் நல்ல மருத்துவமனையிலிருந்து இருந்து சரியான மருத்துவரிடம் செலவைப் பற்றி கவலைப்படாமல் தரமான சுகாதார சேவையை பயன்படுதிக்கொள்ளலாம்.
  • மருத்துவ காப்பீடானது வருமான வரிச் சட்டம் 80Dயின் கீழ் வரி விலக்குகளுக்குத் தகுதியுடையவையாகும் . இது வரிகளிலிருந்து உங்கள் பணத்தை சேமிக்க உதவும்.

முடிவுரை

இவ்வாறு பல வழிகளில் உங்கள் சம்பள உயர்வில் கிடைத்த பணத்தை சேமிக்கலாம். அதுமட்டுமில்லாமல், மேற்கண்ட வழிகளை பின்பற்றுவதன் மூலம் தேவை இல்லாத செலவுகளை நீங்கள் தவிர்க்கலாம்.. மேலும், உங்கள் நிதி ஆலோசகரிடம் கருத்தை கேட்பது நல்லது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments