ஷேர் மார்க்கெட் என்றால் என்ன?
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன?
ஒரு பொருள் வியாபாரம் போன்றதுதான். பொருளை வாங்கலாம், வைத்திருக்கலாம், விற்கலாம், மீண்டும் வாங்கலாம். இதே செயல்பாட்டில் தான் பங்குச் சந்தையும் செயல்படுகிறது. உதாரணத்திற்கு, நமது மொபைல் போனில் பயன்படுத்தும் ஹெட்செட். கம்மி விலையில் வரும்போது நிறைய வாங்கி வைத்துக்கொண்டு தெரிந்தவர்களுக்கு விற்று லாபம் பார்ப்போம். ஒயர் ஹெட்செட் 50 ரூபாய்க்கு வாங்கி நூறு ரூபாய்க்கு விற்று 50 ரூபாய் லாபம் பார்ப்போம். (விலை குறைந்தது, தான் என்று எவரும் எந்த பொருளையும் வாங்க மாட்டார்கள். தரமான பொருள், விலை குறைவாக உள்ளதா என்று பார்த்து தான் வாங்குவார்கள்.)
இதில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. காலம் செல்ல செல்ல wired ஹெட் செட், வயர்லெஸ் ஹெட் செட் ஆக மாறிவிட்டது. நமது மொபைலை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருப்பதனால் புதுமையை நாம் தெளிவாக உணர முடிகிறது. இதேபோல்தான் பங்குச்சந்தையில் கம்பெனிகள் பற்றி நாம் அப்டேட்டில் இருப்பது அந்த கம்பெனியின் போக்கே நமக்கு தெளிவாக காண்பிக்கும்.
பங்குசந்தை:
சரி, இப்போம் பங்குசந்தை பற்றி பாக்கலாம்.
இந்தியாவின் பங்குசந்தைகளான மும்பை பங்குச் சந்தை(NSE), தேசிய பங்குச் சந்தை(BSE) ஆகிய இடங்களில் கம்பெனிகள் எனப்படும் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள். பொதுமக்களிடம் இருந்து பணத்தை “முதலீடாக” பெற பங்குகள் எனப்படும் “சேர்களை” விற்பார்கள்.
கம்பெனிகளில் பிரைவேட் லிமிடெட் கம்பெனி, பப்ளிக் லிமிடெட் கம்பெனி என்று இரண்டு வகை உண்டு. பப்ளிக் லிமிடெட், பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பங்குச் சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட்டில் தனது கம்பெனியை லிஸ்ட் செய்திருப்பார்கள். ஒரு ஷேருக்கு இவ்வளவு பணம் என்று குறிப்பிட்டிருப்பார்கள்..
உதாரணத்திற்கு, happiest minds
இந்த கம்பெனி லிஸ்ட் ஆன, பின்பு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த கம்பெனி ஷேர் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதை வாங்கியவர்கள் தற்போது வைத்திருந்தால் எவ்வளவு லாபம் பார்ப்பார்கள். சிலர் லாபம் பார்த்தது போதும் என்று விற்று இருப்பார்கள். ஒரு சிலர் இதனை தெளிவாக ஆராய்ந்து இன்னும் நல்ல முன்னேற்றம் இந்த கம்பெனியில் நிகழும் என்று அந்த கம்பெனியின் share வைத்திருப்பார்கள்.
பங்குசந்தை புரிதல் :
இவ்வளவு சுவாரசியமான ஷேர் வியாபாரம் பற்றி, புரிந்துகொள்ள முடியாதது ஒன்றும் அல்ல. இந்த ஷேர் மார்க்கெட்டில் ஷேர்கள் ஆங்கிலம் சம்பந்தப்பட்டது அல்ல. ஆங்கில அறிவு இல்லாதது, அதற்கு ஒரு தடையாக இருந்ததும் அல்ல. (பங்குச்சந்தையை பற்றி பள்ளியில் பயிலும் ஒரு மாணவனால் கூட எந்த தடையும் இன்றி எளிதாக புரிந்துகொள்ள முடியும்.) ஷேர்களை புரிந்து கொள்வதும் சுலபம் வாங்கி விற்பதும் சுலபம் தான்.
ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. இங்கு நிறைய பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். அதேசமயம், தனது பணத்தை இழந்தவர்களும் இருக்கிறார்கள். எங்குமே ஆபத்து இல்லாத மிகப் பாதுகாப்பான தொழில்கள் எதுவும் இருக்கிறதா என்ன.?
ஆபத்துக்கள் பற்றி சரியாக தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று. இங்கு பணம் பண்ணுவது, இழப்பது, இரண்டுமே மிக சுலபம். சிலசமயங்களில் லாபமோ, நஷ்டமோ, ஓரிரண்டு நாட்களில், ஓரிரு மணிகளில், ஏன் ஒரு நிமிடங்களில் கூட நடந்து விடும். பங்குச்சந்தையில் நுழையும் முன்பு நஷ்டத்தை பற்றி சொல்கிறேன் என்று எவரும் தவறுதலாக பங்குச்சந்தையை பற்றி யோசிக்க வேண்டாம். இந்த பங்குச்சந்தையில் ரேஸ் மாதிரி செய்தால், ரேஸ் போலதான் பங்குச் சந்தையும் செயல்படும். இதனை ஒரு கணக்குப் போல யோசித்து கவனமாக செய்தால். பெரிய நஷ்டங்கள் வருவதில் இருந்து தப்பிக்கலாம்.
கம்பெனியை எதுக்காக லிஸ்ட் செய்றாங்க?
சரி,ஷேர் மார்க்கெட்டில் கம்பெனியை கொண்டுவந்து எதுக்காக லிஸ்ட் செய்றாங்க?
தனி ஒருவர் முதல் போட்டு தொழில் செய்தால். அது Solo Proprietorship. சிலர் கூட்டு சேர்ந்து செய்தால், அது Partnership. நம்பகமான சிலரையும் தாண்டி, வேறு பலரையும், அதாவது முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்ய நிறுவனத்தை உருவாக்கினால், அதற்குப் பெயர்தான் கம்பெனி.இங்க நம்ம கவனிக்கவேண்டியது என்னன்னு பார்த்தீங்கன்னா, தனியார் தொழில் செய்றவங்க நஷ்டம் ஏற்பட்டது னா, அவங்களே நஷ்டத்தை சரி செய்யணும்.பார்ட்னர்ஷிப் வச்சி தொழில் செய்றவங்க நஷ்டம் ஏற்படும் போது, அந்த பார்ட்னர்கள் ஏற்படும் நஷ்டத்தை பங்கிட்டு சரி செய்வார்கள். ஆனால், கம்பெனி நடத்துறாங்க ரிஜிஸ்டர் ஆஃப் கம்பெனில ரிஜிஸ்டர் பண்ணியிருக்கணும்.
இந்த கம்பெனிக்கு லிமிடெட் liability கம்பெனி என்று பொருள். அதாவது, கம்பெனியின் கடன்களுக்கு, கம்பெனியின் பங்குதாரர்கள் பொறுப்பல்ல. அந்த கம்பெனி தான் பொறுப்பு.( LLP LIMITED LIABILITY PARTNERSHIP (அதாவது நஷ்டம் ஏற்படும் போது கம்பனி பெயரில் உள்ள சொத்துகள் பொருள்கள்( machinery) மட்டுமே asset ஆக ஏற்க்கபடும்.Share holders பெயரில் உள்ள வீடு, கார், போன்றவை கணக்கில் வராது.)
இது போன்ற கம்பெனிகள் பங்குசந்தையில் கம்பெனியை லிஸ்ட் செய்றாங்க. முதல் சேர்க்க ஷேர்கள் எனப்படும் பங்குகளை வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு ஷேருக்கும் ஒரு குறிப்பிட்ட முகப்பு விலை இருக்கும். ஆனால், அந்த ஷேர் விற்கும் பொழுது, அதற்கு முகமதிப்பு விலையைவிட அதிகம் இருக்கலாம்.(இதைத் தொடர்ந்து முகப்பு விலை பற்றி தெரிவிக்கிறேன்.) நிறுவனங்களின், ஷேர்களை வாங்கி விற்பது, அதுதான் ஷேர் வியாபாரம்.
இன்றைக்கு பிரபலமாய் இருக்கும், பெரும்பான்மையான நிறுவனங்கள், இந்த முறையில் தான் நடத்தப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள், BHEL,ONGC,. தனியார் நிறுவனமான, TATA MOTORS, TATA STEEL, TVS MOTORS, WIPRO,. இதையெல்லாம் தெளிவா தெரிஞ்சுக்கிட்டு தான் நிறைய பேர்கள். ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்கின்றன.