IDFC First வங்கி Q2 FY25 காலாண்டு முடிவை வெளியிட்டுள்ளது
கடன் மற்றும் வைப்பு (deposit)
வாடிக்கையாளர் டெபாசிட் YOY 32.4% என்று கணிசமாக உயர்ந்துள்ளது செப்டம்பர் 30, 2023 இருந்து செப்டம்பர் 30, 2024 வரை; Rs. 1,64,726 கோடியிலிருந்து 2,18,026 கோடியாக உயர்ந்துள்ளது.
CASA Ratio செப்டம்பர் 30, 2024 படி 48.9% சதவீதம் என்று முக்கியமாக கவனிக்கவேண்டியதாக உள்ளது
QoQ கிரெடிட் கார்டு வணிகத்திற்கான செலவு மற்றும் வருமான விகிதம் தொடர்ந்து சீரான விகிதத்தில் வளர்ந்து வருகிறது.
FASTag வணிகத்தில் 20 மில்லியன் FASTag ஐக் கொண்டு மிகப்பெரிய வங்கியாக இந்த வணிகத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
கடன்கள் மற்றும் முன்பணங்கள்
ஆண்டுக்கு YOY 21.5% சதவீதம் அதிகரித்துள்ளது. கடன்கள் (கிரெடிட் கார்டு வழங்கல் உட்பட) செப்டம்பர் 30, 2023 ரூ.1,83,236 கோடி முதல் ரூ. செப்டம்பர் 30, 2024 ன் நிலவரப்படி 2,22,613 கோடியாக உள்ளது.
மைக்ரோ ஃபைனான்ஸ் portfolio ல் மொத்த கடன் புத்தகத்தின் சில % ஜூன்-2024ல் 6.3% ஆக இருந்து செப்-2024 இல் 5.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது
மொத்த (Gross) NPA செப்டம்பர் 30, 2024 இல் 1.92% ஆக உள்ளது இது கடந்த வருடம் செப்டம்பர் 30, 2023 இல் 2.11% ஆக இருந்தது. நடப்பாண்டில் இது சிரிது முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
Net NPA: செப்டம்பர் 30, 2023 இல் 0.68% ஆக இருந்த நிகர NPA செப்டம்பர் 30, 2024 இல் 0.48% ஆக குறைந்துள்ளது.
வங்கியின் லாபம்
நிகர வட்டி வருமானம் (Net Interest Income – NII) 21% YOY; Q2 FY24 இல் ரூ. 3,950 கோடி இருந்து ரூ. Q2 FY25 இல் 4,788 கோடியாக வருமானம் உயர்ந்துள்ளது.
கட்டணம் மற்றும் இதர வருமானம் 18% சதவீதம் YOY Q2 FY24 இல் 1,376 கோடியாக இருந்த வருமானம் Q2 FY25 இல் 1,622 கோடியாக உயர்ந்துள்ளது.
IDFC first பேங்க் அதன் செப்டம்பர் காலாண்டில் 73% சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் அது ரூ.751 கோடியாக இருந்த நிகர லாபம் 73% சதவீதம் சரிவைச் சந்தித்து ரூ.200.7 கோடியாக உள்ளது.
கவனிக்கத்தக்கவை
அக்டோபர் 2024 இல் IDFC லிமிடெட் உடனான இணைப்பை IDFC First வங்கி வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.
இதன் மூலம் ரூ. 618 கோடி நிகர (networth) மதிப்பில் மூலதனமாக சேர்க்கப்பட்டுள்ளது அதேசமயம் நிலுவையில் உள்ள பங்கு எண்ணிக்கை 16.64 கோடி பங்குகளாக குறைந்துள்ளது.
Mr.V.வைத்தியநாதன் MD & CEO, IDFC FIRST Bank கூறியதாவது
எங்கள் வணிகத்தின் முக்கிய பங்களிப்புகள் வலிமையானதாக உள்ளது. எங்கள் பிராண்ட், தொழில்நுட்பம் மற்றும் உயர் சேவை நிலைகள் ஆகியவை வலுவான வளர்ச்சியை செயல்படுத்தி வருகின்றன. வங்கியின் வைப்புத்தொகையை வளர்க்கும் திறன் தங்களின் முக்கிய பலமாகவும் strategy ஆகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் ஆண்டுக்கு 32%என்ற விகிதத்தில் டெபாசிட்கள் ஆரோக்கியமாக வளர்ந்துள்ளதும். எங்கள் CASA விகிதம் 48.9% இல் நீடிப்பதும் வங்கியின் வளர்ச்சி நிலைதன்மையாக இருப்பதாய் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.
எங்களின் முக்கிய செயல்பாட்டு செயல்திறன் வலுவாக உள்ளது, முன்னோக்கி செல்லும் எங்கள் லாபத்தை மீட்டெடுக்க நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
குறிப்பு:
இது நிதி ஆலோசனை அல்ல உங்கள் sebi ஆலோசகரிடம் கலந்தாலேசித்து முடிவெடுக்கவும். இக்கட்டுரை தகவலுக்கு மட்டுமே ஆலோசனையாக கருதப்படக்கூடாது..
2024-10-28
3:34:14 PM
IDFC First வங்கி மற்றும் IDFC merger(இணைத்தல்)
IDFC இன்று IDFC First வங்கியுடன் வெற்றிகரமாக இணைந்து முதலீட்டாளர்களின் டீமேட் கணக்கில் சேர்ந்துள்ளது. அதிகமான அளவு வர்த்தகமாகியதால் காலை சுமார் 5% சதவீதம் சரிந்தே வர்த்தகம் தொடங்கியது. பங்கு வாங்குபவர்களின் (காளையின்) ஆதிக்கத்தினால் வர்த்தகம் நிறைவடையும் போது 2% சதவீதம் ஏற்றம் கண்டே காணப்பட்டது.
இன்று 52 வாரம் கீழே சென்ற இந்த பங்கானது சற்றே மேலே எழுந்துள்ளது. காரணம் MD வைத்தியநாதன் அவர்களின் அறிக்கை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் என்றே தெரிகிறது. மேலும் வங்கியின் செயல்பாடுகள் மேன்மை அடைந்து வருவதும், வங்கி துறையின் தேவை போன்ற காரணத்தினால் முதலீட்டாளர்கள் சற்றே குஷியாக உள்ளனர் என்றே தோன்றுகிறது.
IDFC First bank results பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள – www.idfcfirstbank.com
சந்தை செய்திகளுக்காக – https://www.mamsai.com/category/market/