ஹுண்டாய் நிறுவனம் தனது IPO பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதை பற்றி சில தகவல்களை இங்கு காண்போம். செவ்வாய் கிழமை முதல் (அக்டோபர் 15 முதல் 17 வரை) வியாழன் வரை IPO கான லாட்களை முதலீட்டாளர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
குறிப்பு:
உங்கள் sebi ஆலோசகரிடம் கலந்தாலேசித்து முடிவெடுக்கவும். இக்கட்டுரை தகவலுக்கு மட்டுமே.
Hyundai motors பட்டியலிட்டத்திற்கு பின்
இந்தியாவின் மிகப்பெரிய ipo என்று பிரமாண்டமாக இன்று பட்டியலிடப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் பங்கு காலை முதலே சரிவில் தொடங்கியது. பங்குச்சந்தை முடிவில் கிட்டத்தட்ட 7% சதவீதம் வரை சரிந்தது. சில தரகு நிறுவனங்கள் தொடர்ந்து buy ரேட்டிங்கும் சில தரவு நிறுவனங்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி sell ரேட்டிங்கும் கொடுத்துள்ளனர்.
Hyundai Motors IPO தகவல்
IPO Open Date | 15 October 2024 |
IPO Close Date | 17 October 2024 |
Basis of Allotment | 18 October 2024 |
Refunds Initiates | 21 October 2024 |
Credit to Demat Account: | 21 October 2024 |
Listing Date | 22 October 2024 |
ROCE | 13.69% |
RoNW | 12.26% |
P/BV | 14.93 |
Face Value | ₹10 per share |
Price Band | ₹1865 to ₹1960 per share |
Lot Size | 7 Shares |
Listing | BSE, NSE |
Anchor lock-in period end date for 50% shares (30 Days) | November 17, 2024 |
Anchor lock-in period end date for remaining shares (90 Days) | January 16, 2025 |
வாகன துறையில் மாருதி சுஸுகி, டாடா மோட்டோர்ஸ், M & M போட்டியாளர்களை போன்று ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு வகையான வாகன உற்பத்தியில் ஒரு நேர்மறையான போட்டித்தன்மையை அளிக்கிறது.
2023 – 2024 முடிவடைந்த நிதியாண்டுக்கு இடையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் வருவாய் 16% அதிகரித்துள்ளது மற்றும் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) 29% அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் IPO Price Band ஒரு பங்கிற்கு 1865 முதல் ₹1960 வரை நிர்ணயம்செய்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு லாட்க்கு 7 பங்குகள் என நிர்ணயித்துள்ளனர் .
சில்லறை முதலீட்டாளர்களுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச முதலீடு ₹13,720 ஆகும். s-HNIக்கான குறைந்தபட்ச முதலீட்டின் அளவு 15 லாட்கள் (105 பங்குகள்), தொகை ₹205,800, மற்றும் b-HNI க்கு 73 லாட்கள் (511 பங்குகள்), தொகை ₹1,001,560. நிர்ணயித்துள்ளனர்.
Application | Lot | Shares | Amount |
Retail Min | 1 | 7 | ₹13,720 |
Retail Max | 14 | 98 | ₹192,080 |
S-HNI Min | 15 | 105 | ₹205,800 |
S-HNI Max | 72 | 504 | ₹987,840 |
B-HNI Min | 73 | 511 | ₹1,001,560 |
கவனிக்கத்தக்கவை
இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளர்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மாருதி சுஸுகியைத் தொடர்ந்து நாட்டின் இரண்டாவது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. இது Creta, Venue, மற்றும் i20 போன்ற பிரபலமான மாடல்களுடன் பயணிகள் வாகனப் பிரிவில் கொடிகட்டி பறக்கிறது.
தலைசிறந்த உற்பத்தி வசதி
இந்நிறுவனம் தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூரில் ஆண்டிற்கு 700,000 யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அதிநவீன உற்பத்தி ஆலையை கொண்டுள்ளது. இந்த அலையின் உற்பத்தியின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தன் சேவையை செய்கிறது.
புதுமை மற்றும் தொழில்நுட்பம்
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா தனது வாகனங்களில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், மற்றும் எரிபொருள்-திறனுள்ள இயந்திரங்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. வருங்காலத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை அறிமுகப்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது மேலும் அதற்கேற்றவாறு நிறுவனம் அதனை விரிவுபடுத்தியும் வருகிறது.
வலுவான ஏற்றுமதி
நாட்டின் கார் ஏற்றுமதி துறையில் ஹூண்டாய் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது. இது 90 நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது மேலும் இந்தியாவின் வாகன ஏற்றுமதி துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
EV சந்தை
ஹூண்டாய் Kona Electric அறிமுகம் போன்ற மின்சார வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியற்கு பின் EV சந்தை பிரிவில் முன்னணி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விரிவான விவரங்களுக்கு sebi வலைத்தளத்தில் காணவும்
Hyundai Motor India IPO Registrar
KFin Technologies Limited
Phone: +91 40 6716 2222/ 1800 309 4001
Email: hmil.ipo@kfintech.com
Website: https://ris.kfintech.com/ipostatus/
ஹூண்டாய் நிறுவன முகவரி
Hyundai Motor India Limited
Plot No. H-1, SIPCOT Industrial Park,
Irrungattukottai, Sriperumbudur Taluk,
Kancheepuram District – 602 105,
Tamil Nadu, India
Phone: +91 44 6710 5135
E-mail: complianceofficer@hmil.net
Website: www.hyundai.com/in/en
பொருளாதாரம் சார்ந்த செய்திகள் பற்றி தெரிந்துகொள்ள