IPO

100% GMP கொண்ட waaree energies ipo வெளியீடு

79 / 100

Waaree Energies Private Limited தனது IPOவை வெளியீடு செய்வதற்கு டிசம்பர் மாதம் 2023 ல் செபியிடம் தனது DRHP ஐ தாக்கல் செய்தது. ஐபிஓ ஒதுக்கீடு அக்டோபர் 24, 2024 அன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பங்குகள் அக்டோபர் 28, 2024 அன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

வாரீ எனர்ஜிஸ் IPO தகவல்

IPO Open Date 21 October 2024
IPO Close Date 23 October 2024
Basis of Allotment 24 October 2024
Refunds Initiates 25 October 2024
Credit to Demat Account: 25 October 2024
Listing Date 28 October 2024
ROCE 9.45%
RoNW 8.81%
P/BV 8.84
Face Value ₹10 per share
Price Band ₹1427 to ₹1503 per share
Lot Size 9 Shares
Listing BSE, NSE
Anchor bid opening date 21 October 2024
Anchor bid closing date 23 October 2024

தற்போது, வாரீ எனர்ஜிஸ் ஐபிஓ ல் அக்டோபர் 21 முதல் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க முடியும். வாரீ எனர்ஜிஸ் இதன் மூலம் ₹4,321 கோடிகளை திரட்டுவதற்கான அளவுகோலை நிர்னைதுள்ளது.மேலும்  IPO Price Band குறைந்தபட்சம் ஒரு லாட்க்கு 9 பங்குகள் எனவும் Retail Inv. 14 லாட்கள் என்று 126 பங்குகள் வரை விண்ணப்பிக்க முடியும் என்று நிர்ணயித்துள்ளனர். ஒரு பங்கின் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு ₹1,427 முதல் ₹1,503 வரை ஆகும்.

இந்நிறுவனத்தின் பெயர் 2007 இல் Waaree Solar Private Limited என்றும், பின்னர் 2007 இல் Waaree Energies Private Limited என்றும் பெயர் மாற்றப்பட்டது. வாரீ எனர்ஜிஸ் என்பது Solar PV தயாரிக்கும் நிறுவனமாகும் மேலும்  இந்தியாவின் மிகப்பெரிய Solar PV உற்பத்தியாளர்களாக திகழ்கின்றனர்.

இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 1990 முதல் வாரீ எனர்ஜிஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. Waaree Energies Limited குஜராத்தில் சிக்லி, சூரத், டம்ப் மற்றும் நந்திகிராமில் உள்ள ஆலைகளில் ஜூன் 30, 2024 நிலவரப்படி 12 ஜிகாவாட் என்ற இந்தியாவின் மிகப்பெரிய நிறுவல் திறனை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

Application Lot Shares Amount
Retail Min 1 9 ₹13,527
Retail Max 14 126 ₹189,378
S-HNI Min 15 135 ₹202,905
S-HNI Max 73 657 ₹987,471
B-HNI Min 74 666 ₹1,000,998

கவனிக்கத்தக்கவை

வாரீ எனர்ஜிஸ் Grey Market Premium

வாரீ எனர்ஜிஸின் ஐபிஓ முதலீட்டாளர்களை பெரிதும் கவர்ந்ததாகவே தெரிகிறது காரணம் Grey மார்க்கெட்டில் அதன் சந்தை பிரீமியத்தில் (GMP) குறிப்பிடத்தக்க உயர்வைக் கொண்டுள்ளது.100 சதவீதத்திற்கும் அதிகமாக அதன் விலை(GMPல்) உயர்ந்துள்ளதால் இந்த தகவல் முதலீட்டாளர்களிடையே இதன் வலுவான தேவையை எடுத்துக்காட்டுகிறது.

கிரே மார்க்கெட் பிரீமியம் என்பது அதிகாரப்பூர்வமாக பட்டியலிடுவதற்கு முன், ஐபிஓ சந்தை ஆர்வத்தின் முக்கிய குறியீடாகும், Waaree Energies Limited  சமீபத்திய நாட்களில் ரூ.1450 முதல் ரூ.1510 வரை உயர்ந்துள்ளது.

 waaree energies ipo ஆனது சில்லறை முதலீட்டாளர்களால் பலமடங்கு விண்ணப்பிக்கபட்டுள்ளது அதுபோல HNI மற்றும் NII போன்றோர்களின் ஒதுக்கீட்டில் சில மணி நேரங்களிலே முழுவதுமாக நிரம்பியுள்ளது. இன்னும் ஒரு நாள் இருப்பதனால் மேலும் இந்த ipoல் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வாரீ எனர்ஜிஸ் சிறப்பு அம்சங்கள்:

  • 2030 ஆம் ஆண்டிற்குள் 500GW Renewable Energy எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • குஜராத் (சூரத், டம்ப், நந்திகிராம் மற்றும் சிக்லி) மற்றும் உ.பி.யில் (நொய்டா) 143+ ஏக்கர் நிலத்தில் மூலோபாயமாக அமைந்துள்ள 5 அதிநவீன உற்பத்தி ஆலைகள் மூலம் நிறுவனம் செயல்படுகிறது.
  • ஜூன் 30, 2023 நிலவரப்படி, Waaree Energies  நிறுவனத்தில் 1,019 முழுநேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் 
  • புதிய வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் ஒடிசாவில் 6GW ஜிகாவாட் உற்பத்தி வசதியை நிறுவ பயன்படுத்தப்படும் என்று அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலார் செல்கள் மற்றும் சோலார் PV ஆகியவை தயாரிக்கும் பொருட்டும் நிதியின் ஒரு பகுதி பொது நிறுவனத்தின் மேம்பாட்டு  நோக்கங்களுக்காகவும் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Waaree Energies IPO ன் பாதகங்கள்

இந்த நிறுவனத்தில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் சில சவாலான விஷயங்களும் உள்ளன முதலீட்டாளர்கள் அதையும் சற்று கவனிக்க வேண்டும்; அதை பற்றி கீழே பார்க்கலாம்.

சோலார் தொழிற்துறையில் அதிக போட்டி

Waaree எனர்ஜிஸ், உலகளவிலும் மற்றும் இந்தியாவிலும் அதிக போட்டித்தன்மை கொண்ட சூரிய சக்தி துறையில் செயல்படுகிறது; இத்துறையில் சிறிதும் பெரிதுமாக பல நிறுவனங்கள் இருக்கின்றன மேலும் வெளிநாட்டு வர்த்தகத்தில் சீனாவின் போட்டி கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கக் கொள்கைகள்

சூரிய ஆற்றல் தொழில்துறையானது அரசாங்கத்தின் மானியங்கள், ஊக்கத்தொகைகள் மற்றும் மின்சாரத்துறையின் கொள்கைகளால் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்கள் கூட பெரியளவில் சாதக பாதகங்களை ஏற்படுத்தலாம்.

மூலப்பொருட்களின் ஏற்ற இறக்கம்

சூரிய மின்தகடிற்கு தேவையான மூல பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் மற்றும் polysilicon போன்ற பொருட்களின் விலை ஏற்றதினால் கம்பெனியின் லாபம் குறைய வாய்ப்புள்ளது. இறக்குமதி வரிமாற்றம் போன்றவை இத்துறையின் மிகப்பெரிய பாதிப்பாகவும் கருதப்படுகிறது.

Refer Link Click here

குறிப்பு:

இது நிதி ஆலோசனை அல்ல உங்கள் sebi ஆலோசகரிடம் கலந்தாலேசித்து முடிவெடுக்கவும். இக்கட்டுரை தகவலுக்கு மட்டுமே ஆலோசனையாக கருதப்படக்கூடாது..

Waaree Energies Limited Address

Waaree Energies Limited

602, 6th Floor, Western Edge I,

Western Express Highway,

Borivali (East), Mumbai -400066

Phone: +91 22 66444444

Email: investorrelations@waaree.com

Website: https://waaree.com/

 

Link Intime India Private Ltd:

Phone: +91-22-4918 6270

Email: waaree.ipo@linkintime.co.in

Website: https://linkintime.co.in/initial_offer/public-issues.html

பொருளாதாரம் சார்ந்த செய்திகள் பற்றி தெரிந்துகொள்ள

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button