IPO

NTPC கிரீன் எனர்ஜி லிமிடெட் ஐபிஓ தகவல்கள் 2024

71 / 100

இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான NTPC லிமிடெட்டின் renewable எனர்ஜி பிரிவான , NTPC கிரீன் எனர்ஜி லிமிடெட் தனது பொது பங்கு வெளியீடு அறிவித்துள்ளது. இதன் மூலம் தனது பங்குகளை பொது மக்களிடம் விற்பனை செய்து, அதன் மூலம் பெரும் தொகையை ஈட்ட முடிவுசெய்துள்ளது.

IPO Open Date 19/11/2024 
IPO Close Date 22/11/2024
Basis of Allotment நவம்பர் 25, 2024
Refunds Initiates நவம்பர் 26, 2024
Credit to Demat Account: நவம்பர் 26, 2024
Listing Date நவம்பர் 27, 2024
ROE 7.39%
RoNW 2.14%
P/BV 9.89
Face Value ₹10 per share
Price Band ₹102 to ₹108 per share
Lot Size 138 Shares
Listing BSE, NSE
Retail Min 1Lot / 138 shares
Retail Maximum 13Lot / 1794 Shares

NTPC GREEN ENERGY LIMITED IPO

 

NTPC கிரீன் எனர்ஜி லிமிடெட் என்பது என்டிபிசி லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான  இது கரிம மற்றும் கனிம வழிகள் மூலம் திட்டங்களை மேற்கொள்வதில் கவனம் செலுத்துகிறது.

ஆகஸ்ட் 31, 2024 நிலவரப்படி, இந்த நிறுவனம் ஆறு மாநிலங்களில் சூரிய மின்சக்தி திட்டங்களிலிருந்து 3,071 மெகாவாட் மற்றும் காற்றாலை திட்டங்களிலிருந்து 100 மெகாவாட் செயல்பாட்டுத் திறனைக் கொண்டுள்ளது .

ஜூன் 30, 2024 நிலவரப்படி, நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ 14,696 மெகாவாட்களைக் கொண்டுள்ளது, இதில் 2,925 மெகாவாட் இயக்கத் திட்டங்கள் மற்றும் 11,771 மெகாவாட் ஒப்பந்தமாகியுள்ள மற்றும் ஆர்டர் வழங்கப்பட்ட திட்டங்கலாகும்.

ஜூன் 30, 2024 நிலவரப்படி, நிறுவனம் 37 சோலார் திட்டங்கள் மற்றும் 9 காற்றாலை திட்டங்களில் 15 ஆஃப்-டேக்கர்களைக் கொண்டுள்ளது.

ஜூன் 30, 2024 நிலவரப்படி, நிறுவனம் 7 மாநிலங்களில் 31 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை உருவாக்கி வருகிறது, அதன் மொத்த உற்பத்தித்திறன் 11,771 மெகாவாட் ஆகும்.

NTPC கிரீன் எனர்ஜி IPO-யின் முக்கிய அம்சங்கள்

  • IPO அளவு: IPO-யின் மொத்த அளவு ரூ.10,000 கோடி.
  • பயன்பாடு: இந்த தொகை NTPC renewable எனர்ஜி லிமிடெட்டில் முதலீடு செய்யவும், கடன்களை திருப்பிச் செலுத்தவும் பயன்படுத்தப்படும்.
  • நிறுவனத்தின் செயல்திறன்: NTPC கிரீன் எனர்ஜியின் வருவாய் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

ஏன் இந்த NTPC கிரீன் எனர்ஜி லிமிடெட் ஐபிஓ முக்கியமானது?

  • Renewable energyக்கு முக்கியத்துவம்: இந்தியா Renewable energyக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால், இந்த IPO Renewable energy துறையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
  • NTPC-யின் நம்பகத்தன்மை: NTPC இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனம் என்பதால், NTPC கிரீன் எனர்ஜிக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அரசின் ஆதரவு: Renewable energy திட்டங்களுக்கு அரசு அதிக ஆதரவு அளித்து வருவதால், இந்தத் துறையில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

NTPC கிரீன் எனர்ஜி IPOன் சாதகம் 

வலுவான தாய் நிறுவனம் 

NTPC Green Energy இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான NTPC ன் துணை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் வலுவான நிதி, நம்பகத்தன்மை மற்றும் தொழில் அனுபவம் போன்றவை சாதகமாக பார்க்கப்படுகிறது.

பசுமை எரிசக்திக்கான தேவை அதிகம் 

இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிப்பதில் உலகநாடுகளுடன் வலுவான போட்டியில்  இருக்கிறது, அதுபோல பசுமை எரிசக்தியின் தேவையும் சந்தையில் அதிகரித்து வருகிறது, எனவே NTPC பசுமை எரிசக்தியின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவம்

தாய் நிறுவனமான NTPC, ஏற்கனவே ஆற்றல் உள்கட்டமைப்பில் நல்ல அனுபவம் மற்றும் தனி நிபுணத்துவம் பெற்றுள்ளது. மற்ற சோலார் நிறுவனங்குளடன் ஒப்பிடும் போது NTPC பசுமை எரிசக்தி நிறுவனத்திற்கு இதனால் சற்று சாதக தன்மை அதிகமாகவே இருக்கிறது. இவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் போன்றவை தாய் நிறுவனத்திடம் இருந்து எளிதாக கிடைத்துவிடுகிறது. 

NTPC கிரீன் எனர்ஜி IPOன் பாதகங்கள் 

அதிக மூலதனம் 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு அதிக அளவிலான மூலதன முதலீடு தேவைப்படுகிறது. இந்த தன்மை நிறுவனத்தின் பணப்புழக்கத்தை பாதிக்கலாம் மேலும் அவர்களின் செயல்பாடுகள் தாமதமகாலாம் அல்லது எதிர்பாராத இடர்பாடுகள் ஏற்பட்டால் நிறுவனம் கடன் வாங்கவும் வழிவகுக்கும்.

அரசு ஒழுங்குமுறை சார்பு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையானது அரசாங்கக் கொள்கைகள், மானியங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளால் பெரிதும் சார்ந்திருக்கிறது மேலும் அதனால் பாதிக்கப்படவும் செய்கிறது. எந்தவொரு பாதகமான கொள்கை மாற்றங்களும் NTPC பசுமை எரிசக்தியின் லாபத்தை பாதிக்கலாம். குறிப்பாக பவர் செக்டர் அரசின் கொள்கை முடிவை பொறுத்து மாறுபடும் NTPC பசுமை எரிசக்தியும் அது சார்ந்தே இயங்கும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.

கணிசமான போட்டி 

அதானி கிரீன் எனர்ஜி, டாடா பவர் ரினியூவபிள்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பவர் போன்ற பல முக்கிய நிறுவனங்களுடன் NTPC பசுமை எரிசக்தியும் போட்டி போடா வேண்டிய சூழ்நிலையில் உள்ளது, இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை மேலும் எதிர்காலத்தில் இந்த போட்டியானது மேலும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.

மிகைபடுத்தப்பட்ட மதிப்பீடு

பல பசுமை எரிசக்தி நிறுவனங்களைப் போலவே, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சுற்றி முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், ஐபிஓவில் NTPC கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் அதிக மதிப்பீடு ஆபத்தாகவே உள்ளது. மேலும் சந்தை சூழ்நிலை சரியாக இல்லாத காரணத்தினாலும் முதலீட்டாளர்களிடம் மந்தமான சூழ்நிலையே காணப்படுகிறது.

வானிலை சார்ந்திருத்தல்

சூரிய மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியானது, வானிலை மற்றும் பருவகால நிலைகளைப் பொறுத்தது. பருவநிலை மாற்றங்களால் மின் உற்பத்தியில் ஏற்படும் மாறுபாடுகள் நிறுவனத்தின் வருமானத்தை பாதிக்கும் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.

NTPC  Green Energy IPO நோக்கங்கள்:

NREL ஆல் பெறப்பட்ட சில கடன்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திரும்ப செலுத்துவதே நிறுவனத்தின் நோக்கம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சிறு பகுதி வணிகத்திற்காகவும் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் பயப்படுத்தப்படும் என தெரிகிறது.

பெருவாரியான புரோக்கரேஜ் நிறுவனங்கள் நீண்டகால முதலீட்டுக்கு நல்ல நிறுவனமாக கருதப்படுகிறது என்றும் சிலர் பரிந்துரைத்துள்ளனர். இருந்தபோதிலும் முதலீடு முடிவுகளை தங்கள் நிதி ஆலோசகரிடம் கேட்டு முதலீடு செய்வது அவசியம்.

Related Article – https://www.mamsai.com/economy/solar-energy-sector-in-india/

NTPC green energy share stats
ntpc green energy share price and details

குறிப்பு:

இது நிதி ஆலோசனை அல்ல உங்கள் sebi ஆலோசகரிடம் கலந்தாலேசித்து முடிவெடுக்கவும். இக்கட்டுரை தகவலுக்கு மட்டுமே ஆலோசனையாக கருதப்படக்கூடாது..

மேலும் விரிவான செபியில் உள்ள தகவலிற்கு – இங்கு சொடுக்கவும்

NTPC Green Energy Limited Contact Details: 

NTPC Green Energy Limited

NTPC Bhawan, Core -7,

SCOPEComplex 7 Institutional Area

Lodi Road, New Delhi,-110003

Phone: +91 11 24362577

Email: ngel@ntpc.co.in

Website: https://www.ngel.in/

 

NTPC Green Energy IPO Registrar:

Kfin Technologies Limited

Phone: 04067162222, 04079611000

Email: ntpcgreen.ipo@kfintech.com

Website: https://kosmic.kfintech.com/ipostatus/

பொருளாதாரம் சார்ந்த செய்திகள் பற்றி தெரிந்துகொள்ள

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button