ஆன்லைன் வர்த்தகத்தின் அபிரிவிதமான வளர்ச்சி
சந்தை சூழ்நிலையில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளும் தொழில்முனைவோர்களும் தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதே உண்மை .
காரணம் : இணையதள வளர்ச்சி முன்னேறிக்கொண்டே உள்ளது, அடுத்த தலைமுறை மக்களின் பொருட்கள் தேர்ந்தெடுக்கும் முறையும், நுகர்வு கலாச்சாரமும் வெகுவாக மாறியுள்ளது.
இன்று UPI ஆன்லைன் பரிவர்த்தனை பலவற்றை எளிமையாக்கியுள்ளது .அண்ணாச்சி கடை முதல் சாலையோர கடைகள் வரை தங்களை ஆன்லைன் பரிவர்த்தனைக்கு இணைத்துள்ளனர், குறிப்பாக நகர்ப்புறங்களில் இந்த மாற்றம் வேகமாக மாறியுள்ளது.
எ.க)இன்றைய இளைஞர்கள் ஒரு கடையில் பொருள்களை வாங்கியபின் பணபரிமாற்றத்திற்கு QR Code தேடுகின்றனர் அந்த கடையில் அந்த வசதி இல்லையெனில் வேறு கடைக்கு போகும் போக்கு அதிகரித்துள்ளது . இதனால் அந்த கடைகாரர் தன் வாடிக்கையாளரை இழக்கிறார்.
கடந்தாண்டு எந்த எந்த துறைகளில் ஆன்லைன் வர்த்தகம் விரிவடைந்துள்ளது என்பதை சிறு தொகுப்பாக இங்கு காணலாம்
பயணங்கள் மற்றும் போக்குவரத்துத்துறை
இதில் வெளியே செல்ல வாடகை வாகனங்கள் தெரிவு செய்வதாகட்டும் , சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளதாகட்டும், எதற்கும் App க்கு பஞ்சமில்லை . இன்று இரண்டு சக்கர வாகன பயணங்கள்கூட வாடகை முறைக்கு மாறியுள்ளது . டெக்னாலஜியின் வளர்ச்சியால் இது போன்ற புதிய தொழில்களும் உள்ளே வந்துள்ளது.
e.g) ola, uber, ixigo, Rapido Bike taxi
உணவு விநியோகம்
உணவு துறையில் பெரிய அளவில் மாற்றம் கண்டு போட்டி சூழல் கடுமையாக உள்ளது. எல்லார்க்கும் Swiggy மற்றும் zomato நிறுவன சேவைகள் கண்முன்னே வந்து போகும் ஆனால் கறிக்கடை ,மளிகைக்கடை,மீன்கடை மட்டும் பல உணவு துறையில் இருக்கும் சிறு நிறுவனங்களும் மறுமலர்ச்சி காண்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை . e.g)fipola, tendercut, bigbasket
மருத்துவத்துறை
ஆன்லைன் மூலம் மருத்துவரை அணுகவும், அவரிடம் ஆலோசனை பெற முன்பதிவு செய்வதாகட்டும், மருத்துவர் ஆலோசனை பிறகு மருந்துகளை வீட்டிற்கே நேரடியாக கிடைக்க என்று இதன் பனி தொடர்கிறது .
இந்த துறையில் டாடா முதல் அம்பானி வரை போட்டியில் இருக்கின்றனர். சிறு மெடிக்கல் வணிகர்களும் seller முறையில் விற்பனை செய்கின்றனர் .
எ.க )1mg, netmeds
சலவை
துணி சலவை செய்யும் தொழிலும் ஆன்லைன் நடைபெறுகிறது என்பதை கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது . குறிப்பிட்ட மொபைல் செயலிளிருந்து அவர்களின் அழுக்கு ஆடைகளை எடுப்பதற்கான நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்தால் போதும் அவர்களே வந்து எடுத்து சென்று உலர்த்தியும் மீண்டும் வந்து வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விடுகின்றனர் அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் .
அத்தியாவசிய சேவைகள்
இந்த துறையில் பலர் பயன் பெறுகின்றனர். குறிப்பாக
- மெக்கானிக்
- தச்சுவேளை
- எலெக்ட்ரிசியன்
- பிளம்பிங்
ஒரு app ல் இருந்து இவர்களின் சேவைகளை எங்கு இருந்து வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியுமாறு வடிவமைத்துள்ளனர். நாம் தனி தனியாக தேடுவதை விட ஒரே இடத்தில இன்னும் பல சேவைகளை இது போன்ற தளங்கள் மக்களுக்கு தருகின்றனர்.
எ.க) Urbanclap
சரக்கு மற்றும் தளவாடங்கள்
இந்த துறை வேகமாக வளர்ச்சியடையும் துறையாக கருதப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை துறை ஆன்லைன் மூலம் பயணிப்பதின் மூலம் நேரம் மிச்சமாகவும் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்குகிறது. எடுக்கும் இடம் மற்றும் இறக்கும் இடம் மேலும் சில தகவல்களை உள்ளிட்டபின் எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டு செயல்படுத்துகிறது. இந்த துறை தனிநபர்களுக்கு மட்டுமின்றி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், பொது துறை நிறுவனங்களுக்கும் சேவை செய்ய துவங்கியுள்ளது. எதிர்காலத்தில் பல முன்னணி நிறுவனங்களும் இதில் போட்டி போடும் , இப்பொழுது உணவு டெலிவரி செய்யும் சில நிறுவனங்கள் இந்த தொழிலும் முத்திரை பதித்து வருகின்றனர்.
இணையவழி தொழில்
ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள், பாகங்கள், வீட்டு அலங்காரம் போன்றவற்றிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அணைத்து விற்கப்படுகிறது. எந்த ஒரு பொருளையும் ஆன்லைன் மூலம் சரியான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று நிகழ் காலமே சான்று. இன்று முதலீடே இல்லாமல் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட முடியும், சிறிது டிஜிட்டல் மார்க்கெட்டிங் தெரிந்தால் போதும் சிறியளவிலான தொழிலை வேகமாக தொடங்கலாம் எங்கிருந்தாலும் .
எ.க) nativespecial, chennaiangadi
கல்வி தொழில்
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் நூலகங்கள் என சகல கல்வி நிலையங்களும் இன்று ஆன்லைன் துறைக்கு மாறிவிட்டனர்.
ஒரு வேலையில் தொடரும் ஒரு நபர் வேறொரு துறைக்கு மாற்றமடைய இன்று எந்த ஒரு பயிற்சி நிலையத்திற்கு போவதில்லை இருந்த இடத்திலே கற்றுக்கொண்டு மாறுகின்றார்.
பள்ளி குழந்தைகளுக்கு தொழில்நுட்ப மூலமாக அவர்களின் கல்வி பயிலும் முறையும் மாறியிருக்கிறது. இதில் பல புகார்கள் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் பல நன்மைகளும் இருக்கிறது.
அதே வேலையில் பல நபர்கள் தங்கள் திறமைகளை பலர்க்கு ஆன்லைன் மூலமாக கற்று கொடுத்து தங்களின் வருவாயை பெருகுகின்றன. விளையாட்டுகள், தொழில் திறன்களை கற்றுக்கொடுத்தும் பயனடைகின்றனர்.
எ.க ) byjus, zoom
முடிவுரை
ஆன்லைன் சந்தையில் நுகர்வோரின் வாங்கும் திறன் கடந்த தொற்று நோய் காலத்திற்கு முன்பு இருந்த நிலையை விட சென்றகாலாண்டில் மிகவும் அதிகரித்துள்ளது. நேரடியாக வாங்கும் பொருட்களின் எண்ணிக்கை சரிந்துகொண்டே வருவது நுகர்வோருக்கும் சரி வியபாரிக்கும் சரி நல்லதல்ல ஆனால் காலத்தின் ஓட்டத்தில் .நாம நம் தொழிலில் நிலைக்க வேண்டுமானால் ஈ காமெர்ஸ் துறையில் காலடி எடுத்து வைத்தாகவேண்டும் .
ஊரடங்கு நேரத்திலும், பண்டிகைக்காலங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் நேரங்களில் மக்களின் வாங்கும் எண்ணம் அதிகமாக இருக்கும், அந்த நேரங்களில் பல யுக்திகளை வியபாரிகள் கையாள்கின்றனர். ஆன்லைன் தள்ளுபடி இன்று வெகுவாக மாதம் மாதம் கொண்டாடப்படுகிறது.
வர்த்தகர்களும் தங்களின் பொருளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல முயற்சிகளை கையாள்கின்றனர் 2022 ன் எதிர்காலத்தில் இது இன்னும் உச்சம் பெரும் என்று பல வல்லுனர்களும் நம்புகின்றனர்.
இலவசமாகவும் இதை தொடங்கமுடியும் அனால் ஒரு ₹25000 முதலீட்டில் தரமாக நல்ல வெப்சைட் செய்து வாடிகையாளர்களை கவர முடியும் . இதில் முக்கியமான விடயம் தரவு பாதுகாப்பு(Data Security) அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்
கடந்த வருடம் பங்குச்சந்தையில் இதுபோன்ற வர்த்தக நிறுவனங்கள் ipo ல் இறங்கினர்.வருங்காலத்தில் இது மேலும் தொடரும் பலர் தங்களின் தொழில்முறையை மாற்றி அம்மைக்க வேண்டிய சரியான தருணம் இது என்றே தோன்றுகிறது .