வர்த்தகம்

பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டீல் துறை.

57 / 100

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட உதவும் துறைகளில் முக்கிய பங்கு வகிப்பது எஃகுத்துறை (Steel Sector) ஆகும்.

ஏனென்றால், அது ஒரு மூலப்பொருள் மற்றும் ஒரு இடைநிலை தயாரிப்பு ஆகும்.

இந்தியா பயன்படுத்தும் ஸ்டீல், பெரும்பகுதியை உள்நாட்டிலே உற்பத்தி செய்துகொள்கிறது.  ஆனால், சில சமயம் தேவைகள் மற்றும் விலை காரணமாக அதிகபடியான இறக்குமதி செய்யபடுகிறது.

ஸ்டீல் துறை

ஸ்டீலின் தேவைகள் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருட்களில் முக்கிய அம்சமாக உள்ளது. உதாரணத்திற்கு நம் ஓட்டும் வாகனங்கள், வசிக்கும் வீட்டில் உபயோகிக்கும் பல பொருட்கள் ஸ்டீல் ஆகும். பீரோ, ஸ்டீல் ஜன்னல், பூட்டு, டேபிள் போன்றவை அடங்கும். அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருட்களில் ஸ்டீலிங் தேவை இன்றியமையாததாக உள்ளது.

மின் இணைப்பு கோபுரங்கள் – மின்சாரம், கேஸ்- எரிவாயு குழாய்கள்,   ராணுவ ஆயுதங்கள் போன்ற பலவற்றில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது ஸ்டீல். நம் வாழ்க்கையை வசதியாக வாழ்வதற்கு முக்கிய பங்காற்றுகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% தொழில்துறையைக் கொண்டுள்ளதால், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராகத் திகழ்கிறது மற்றும் உலகின் இரண்டாவது பெரிய ஸ்டீல் நுகர்வோராக சீனாவை முந்தியுள்ளது.

தொழில்துறை முன்னேற்றத்தில் ஸ்டீல்த்துறை எப்போதும் முன்னிலையில் உள்ளது என்றும், எந்த பொருளாதாரத்திற்கும் இதுவே அடித்தளம் என்றும் சொன்னால் மிகை ஆகாது.

இந்திய ஸ்டீல் தொழில் நவீனமானது, அதிநவீன ஸ்டீல் ஆலைகள் உள்ளன. பழைய ஆலைகள் தொடர்ச்சியாக நவீன மயமாக்களுக்கும் அதிக ஆற்றல் திறன் நிலைக்கும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

2008 முதல் ஸ்டீல் உற்பத்தி 75% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு ஸ்டீல் தேவை கிட்டத்தட்ட 80% அதிகரித்துள்ளது. கடந்த 10-12 ஆண்டுகளில் இந்தியாவின் ஸ்டீல் துறை கணிசமாக விரிவடைந்துள்ளது.

ஸ்டீல் உற்பத்தி 2030-2031க்குள் 300மில்லியன் டன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எந்தெந்த துறைகளில் ஸ்டீல் முக்கிய பங்குவகிக்கிறது என்பதை காண்போம்.

கட்டுமானம்(construction)

வீடுகள், வணிகவளாகம், பாலங்கள், உட்கட்டமைப்பு பணிகள் போன்றவற்றில் ஸ்டீலின் தேவை அதிகமானது. இயற்கை பேரழிவுகளை தாங்கும் தன்மை கொண்ட வலிமை, நீடித்துழைப்பு இவற்றின் காரணத்தால் இது கட்டுமானத்திற்கான பிரபலமான பொருளாகும்.

வாகனம் (Automotive)

இதில் சைக்கிள், கார், பைக் போன்ற வாகனங்களின் உதிரி பாகங்கள், வாகனத்தின் என்ஜின் போன்ற  உற்பத்தியில் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது.

பேக்கேஜிங் (Packaging)

ஸ்டீல் கேன், பாட்டில் போன்றவற்றில் வெளிப்புறத்தில் இருந்து உட்புறத்தை காக்கும் வகையில் இதில் பயன்படுத்தபடுகிறது. மீண்டும் உபயோக்கிக்கும் திறனும் கொண்டது.

உபகரணங்கள் (Appliances):

வீட்டு உபகரணங்களான வாஷிங் மிசின், கஸ் அடுப்பு மற்றும் குளிர்சாதனம் போன்ற பல்வேறு சாதனங்களை வடிவமைக்கும் பணியில் தேவைப்படுகிறது.

ஆற்றல் (Energy):

காற்றாலை, சோலார் பேனல்கள் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் இவற்றின் உற்பத்தியில் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆற்றல் உட்கட்டமைப்பு கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 

மருத்துவம் (Medical )

மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் போன்றவற்றின் உற்பத்தியில் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது.

 

இந்திய ஸ்டீல் தொழிலில் சில முக்கிய முதலீடுகள் 

 

  • செப்டம்பர் 2022 இல், மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்திற்கு 30,000 டன் முழு DMR தர சிறப்பு எஃகையும் வழங்கியது.
  • ஆகஸ்ட் 2022 இல், டாடா ஸ்டீல் பஞ்சாப் அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • மே 2022 இல், டாடா ஸ்டீல் கேபெக்ஸ் (CAPEX) ரூ. 12,000 கோடிகள் (1.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள்).
  • அக்டோபர் 2021 இல், டாடா ஸ்டீல் 2025 க்குள் குறைந்தபட்சம் ஒரு பில்லியன் டன் திறன் கொண்ட ஸ்கிராப் (scrap -based facilities) அடிப்படையிலான வசதிகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
  • அக்டோபர் 2021 இல், JSW ஸ்டீல் ரூ. 150 பில்லியன் (US$ 19.9 மில்லியன்) ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒரு ஸ்டீல் ஆலையை உருவாக்க மற்றும் பிராந்தியத்தில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
  • அக்டோபர் 2021 இல், இந்தியாவில் ஆர்செலர் மிட்டல் மற்றும் நிப்பான் ஸ்டீல் கார்ப்பரேஷனின் கூட்டு நிறுவனமான ஸ்டீல் நிறுவனம், முதலீடு செய்து நாட்டில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்தது. 10 ஆண்டுகளில் 1 டிரில்லியன் (US$ 13.34 பில்லியன்).
  • ஆகஸ்ட் 2021 இல், ஆர்சிலர் மிட்டல் குஜராத்தில் திறன் விரிவாக்கத்திற்காக 1 லட்சம் கோடி (13.48 பில்லியன் அமெரிக்க டாலர்கள்).
  • ஆகஸ்ட் 2021 இல், டாடா ஸ்டீல் ஜார்க்கண்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் திறன்களை விரிவுபடுத்த 3,000 கோடி (US$ 404.46 மில்லியன்).
  • ஆகஸ்ட் 2021 இல், ஜிண்டால் ஸ்டீல் & பவர் லிமிடெட், வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த ஆறு ஆண்டுகளில் திறனை அதிகரிக்க 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
  • ஜூன் 2021 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளில், JSW ஸ்டீல் ரூ. 47,457 கோடி (6.36 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) விஜயநகரின் ஸ்டீல் ஆலை திறனை 5 MTPA ஆக அதிகரிக்கவும், ஒடிசாவில் சுரங்க உள்கட்டமைப்பை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கிய ஸ்டீல் நிறுவனங்கள் 

  • JSW Steel
  • Tata Steel
  • Jindal Steel
  • S A I L

இந்த நான்கு நிறுவனங்கள் தான் ஸ்டீல் உற்பத்தியில் முன்னணியில் உள்ளனர். இந்த நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளை பெருக்கியும் அவர்களது உற்பத்தி திறனை அதிகரித்துகொன்டே உள்ளனர். இடைக்கால பட்ஜெட் ல் கூட நாட்டின் உள்கட்டமைப்பு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படைவசதி வளர்ச்சி பாதையில் போகும் பொழுது ஸ்டீல் துறையும் வேகமாக வளரும் என்பதில் ஐயமில்லை.

முடிவுரை 

இந்தியாவின் எஃகுத் துறையானது நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையின் முன்னேற்றத்திற்கு நல்ல பங்களிக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஸ்டீல் துறையானது நாட்டின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தி உலகளாவிய பொருளாதார சக்தியாக இந்தியா வெளிப்படுவதற்கு ஒரு தூணை போன்று செயல்படும் என்பதில் ஐய்யமில்லை. infrastructure செக்டரில் முதலீடு செய்ய விரும்புவர்கள் இந்த ஸ்டீல் செக்டரையும் கண் வைத்து கொள்வது நல்லது.

tag: influencer marketing tamil, cement sector in india

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button