Nse & Bse Corporate Actions in Tamil
Corporate Actions – நிறுவனங்களின் நடவடிக்கைகள்
BSE மற்றும் NSE பொதுவாக சில நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து இங்கு சுருக்கமாகவும் உதாரணத்தோடும் காண்போம்.
போனஸ் பங்கு (Bonus Stock)
ஒரு நிறுவனம் அதன் இருப்பில் இருந்து பங்கை பங்குதாரர்களுக்கு இலவசமாக கொடுப்பதுதான் bonus issue எனப்படும்.போனஸ் என்பது விகிதாச்சாரம் அடிப்படையிலேயே எப்போதும் வழங்கப்படும் அது எப்படி என்பதை எடுத்துக்காட்டுடன் காணலாம்.
எ.க: 1)
நிறுவனம் 1:2 என்று அறிவிக்கும் போது 2 இரண்டு பங்கு வைத்திருந்தால் 1 ஒரு பங்கு கூடுதலாக கிடைக்கும் .
2+1=3 இதன்படி தற்போது உங்களிடம் 3 பங்குகள் கையில் இருக்கும்.
எ.க: 2)
நிறுவனம் 2:1 என்று அறிவிக்கும் போது 2 இரண்டு பங்கு வைத்திருந்தால் 4 பங்கு கூடுதலாக கிடைக்கும் .
2+4=6 இதன்படி தற்போது உங்களிடம் 6 பங்குகள் கையில் இருக்கும்.
ex bonus date அன்று அந்த பங்கின் விலை குறையும் கரணம் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்கின் வரத்து அதிகரிப்பதால் அதன் விலை குறைகிறது . பங்குதாரர் ex bonus date முன்பாகவே பங்கை வாங்கி வைத்திருத்தல் வேண்டும் அப்பொழுதுதான் அவர் போனஸ் பங்கை பெற தகுதியுடையவராக கருதப்படும் .
போனஸ் பங்கு அளிப்பதற்கான முதன்மை காரணம் பங்குதாரர்களுக்கு ஊக்கமளிக்கவும் வெகுமதியாகவும் அதனை பார்க்கப்படுகிறது. போனஸ் பங்கினால் விலை குறைகிறது எனவே மேலும் பலர் அந்த பங்கினை வாங்குவர் அதனால் பங்கின் மதிப்பு பலபடும்.
நிறுவனத்தின் பங்கின் ஒருங்கிணைப்பு – Amalgamation
ஒரு பங்கை இன்னொரு பங்குடன் இணைப்பது என்பது amalgamation எனப்படும். உதாரணத்திற்கு சமீப நாட்களுக்கு முன்பாக டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் அதன் கிளை நிறுவனங்களை இணைத்தது.
எ.க)Tatasteel bsl amalgamation ஆனது 15:1 என்ற விகிதாச்சாரத்தில் TataSteel உடன் இணைக்கப்பட்டது. அதாவது 15 Tatasteel bsl வைத்திருந்தால் 1 ஒரு Tatasteel பங்கு கிடைக்கும் என்பதே அர்த்தம் .
இதையும் exdate முன்பாகவே வாங்கி வைத்திருக்க வேண்டும் .
Dividend எப்படி கொடுக்கப்படுகிறது
ஒரு நிறுவனத்தின் AGMன் போது அதன் உறுப்பினர்களால் டிவிடெண்ட் பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகிறது . அதை தான் declaration date எனப்படும் . dividendஐ பெறவேண்டுமானால் ex dividend date க்கு முன்பாக பங்குதாரர்கள் பங்கை வைத்திருக்கவேண்டும் . ex dividend date அன்று பங்கின் விலை குறைந்து தொடங்குவதற்கு காரணம் dividend தொகை கழித்தே வர்த்தகமாகும். நீண்ட நாள் முதலீட்டாளர்களுக்கு இது சாதகமானதே . payment date அன்று டிவிடெண்ட் தொகையானது நேரடியாக வங்கியில் சேரும்.
E-voting என்றால் என்ன
ஒரு நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், மாற்றத்திற்க்காகவும் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் . அந்த முடிவை எடுப்பதற்கு ஒவ்வொரு முதலீட்டார்க்கும் உரிமை உள்ளது எனவே E-voting முறையில் வாக்கு அளிப்பதற்கு ஈ மெயில் மூலம் முதலீட்டாளர்களுக்கு தெரியபடுத்தப்படும் .
அதே மெயிலில் எங்கு எப்படி வாக்கு அளிப்பது போன்ற விபரம் கொடுக்கப்பட்டிருக்கும்
எ.க) பெரும்பாலும் www.evoting.nsdl.com மற்றும் www.evotingindia.com மூலமாகவே நடத்தப்படும் . இப்பொழுது HAL நிறுவனத்தில் துறை சார்ந்த அல்லது நிறுவனம் சார்ந்த முடிவுகள் எடுக்கும் போது முதலீட்டாளர்கள் தங்களின் உரிமையை அங்கு பங்களிக்கலாம்.
மேலே குறிப்பிட்ட வலைத்தளத்தில் எந்த நிறுவனத்தின் E -Voting நடைபெறபோகிறது அதில் எந்த தீர்மானம் நிறைவேற்றப்படப்போகிறது போன்ற தகவல்களையும் காணலாம். குறிப்பு: E -Votingல் முதலீட்டாளர்கள் பங்கெடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை .
AGM என்றால் என்ன
வருடத்திற்கு ஒரு முறையாவது நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை, அதன் செயல்பாடு, சாதனை மற்றும் நிறுவனம் சார்ந்த விஷயங்களை முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது கட்டாய விதி . இதில் என்ன நடக்கும் என்பதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்; அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகத்தில் இருப்பவரை மாற்றவோ, டிவிடெண்ட் போனஸ் கொடுக்கலாமா வேண்டாமா போன்ற அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
இதன் தாக்கம் பங்குச்சந்தையில் எப்படி எதிரொலிக்கும் என்பதை காணலாம்; அந்நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை மோசமாக இருந்தாலோ, அதேபோல் அங்கு புதிய தலைமை அதிகாரிகளை நியமிக்கும்போது அல்லது நீக்கும் போதும் பங்கில் ஏற்ற இரக்கம் வரலாம் காரணம் அந்த அதிகாரி திறமையானவர் என்று சந்தையில் முதலீட்டாளர்கள் அபிப்ராயம் இருந்தால் இது சாத்தியமாகும் .
EGM என்றால் என்ன
EGM ற்கும் AGM ற்கும் பெரிய வித்யாசம் ஓன்றும் இல்லை, சில அவசர முடிவுகள் ஆகட்டும் தவிர்க்கமுடியாத நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்காகட்டும் EGM (extraordinary general meeting) நடத்துவார்கள் . இதுவும் பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கின் விலையில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் .
Stock Split
இப்போது stock split பற்றி காணலாம். உதாரனத்திற்கு 10 ரூபாய் Face Value கொண்ட ஒரு பங்கு 2 ரூபாயாக(FV) மாற்றப்படப்போகிறது என்று வைத்துக்கொள்வோம்.
எ.க)
என்னிடம் 1 பங்கு உள்ளது என்றால் அது 5 ஐந்தாக மாறும் .
அந்த பங்கின் விலை 100ஆக இருந்தால் 20ஆக குறையும்.
- இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். ஆம், இருக்கிறது விலை உயர்ந்த ஒரு பங்கை நாம் விரும்பியும் வாங்க முடியாத நிலை இருக்கலாம் stock split பிறகு அதன் விலை குறைகிறது அதனால் சிறிய முதலீட்டாளர்களும் பங்கை வாங்குவர்.
- அப்படி இருக்கையில் பங்கின் volume அதிகரிக்கும் அதேவேளையில் பங்கின் valueம் அதிகரிக்கும் .
- பங்கின் ஏற்றஇறக்கதின் வேகம் குறையும்.
Reverse Stock Split
இவ்வகை மேலே குறிப்பிட்டவற்றிற்கு நேரெதிர்மறையானது . 2 ரூபாய் face value 10 ஆக மாற்றப்படலாம். 20ரூபாய் பங்கின் விலை 100க மாறும் .
- பங்குதாரர்களின் எண்ணிக்கை குறையும்
- பங்கு delisting தவிர்க்கப்படும் .
Split Up
ஓர் நிறுவனத்தை 2 அல்லது 3க பிரிக்கப்பட்டு தாய் நிறுவனம் தூக்கி எறியப்படும். இதற்க்கு காரணம் ஒரே நிறுவனம் உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை போன்றவற்றை செய்யும்போது அது அரசாங்கத்தால் monopoly ஆக பார்க்கப்படும் .
- இதனால் நிர்வாக சீர்திருத்தம் ஏற்படும் .
- நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிக்கும்.
இந்த கட்டுரையில் பங்குச்சந்தையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளான Corporate Actions பற்றி பாத்துள்ளோம் . இதில் சில தகவல்கள் விடுபற்றிருக்கலாம் அதை மற்றொரு பதிவில் தொடர்ச்சியாக காண்போம் .