அவசியம் தேவை சேமிப்பு
சிறந்த சேமிப்பு திட்டங்கள்
வருமானம் :
எல்லோருக்கும் வருமானம் வருகிறது. வேலைக்கு போவது, விவசாயம், சுய தொழில், அல்லது வியாபாரம் என்ற ஒரு வகையில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நன்மையும், நம் குடும்பத்தையும் பராமரிப்பதற்கு போதுமானதாக இருக்கிறது. இதில் பெரும்பாலானோருக்கு பற்றாக்குறையாக இருக்கிறது. வேறு சிலருக்கு செலவு போக மீதம் உபரியாக உள்ளது. இப்போது பற்றாக்குறை உள்ளவர்களை தவிர்த்து, உபரியாக பணத்தை வைத்திருப்பவர்கள் பற்றி நாம் பேசுவோம்.
சேமிப்பு :
இப்படி உபரியாக இருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்பது அடிப்படை. ஏன் அப்படி என்றால், வருங்காலத்தில் நம் தேவைகள், நம் குடும்பத்தின் தேவைகள், அதிகரிக்குமே தவிர குறையாது. அந்த சமயத்தில் அப்போதைய தேவைக்கு நாம் சம்பாதிக்கும் தொகை மட்டும் போதாது, தேவை இருக்கும் அளவு நம் சம்பாத்தியம் வளராது போகலாம். ஆக, இன்றைய வருமானத்தை அப்படியே செலவு செய்வது. அப்படின்னு ஒரு கண்ணோட்டத்தில், நாம் பார்த்தாலும் கண்டிப்பாக வருமானத்தில், ஒரு பகுதியை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இப்படி சேமிப்பது என்பது பெரும்பாலானவர்கள் செய்வதுதான். சில நிறுவனங்களில் பணி புரிவோருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சேமிப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தான் பிஎஃப் என்று கூறுகிறோம். இதுபோக மக்களும் வேறு பலவகைகளிலும் மாத சேமிப்பு செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக,
-
-
-
- ரெக்கரிங் டெபாசிட் (RD),
- ஃபிக்ஸட் டெபாசிட் (FD)
-
-
இப்பொழுது நாம் பார்த்தது எல்லாம் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே. சுயதொழில் செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், நிலம் வைத்துக்கொண்டு விவசாயம் செய்பவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் இவர்களுக்கெல்லாம் சேமிப்பு என்பது அவர்களாக பார்த்து ஏதாவது சேமித்து வைத்துக் கொள்வதுதான்.
பணத்தை சேமிப்பது என்பது நல்ல விஷயம். ஆனால், பணத்தை சேமித்து வைத்து விட்டால் மட்டும் போதுமா? சேமிக்க வேண்டும். சேமித்தவையை சரியாக முதலீடும் செய்ய வேண்டும். நம் வேலையை நாம் பார்க்க நம் சேமிப்பு நமக்காக சம்பாதிக்க வேண்டும்.
முதலீடு :
பணம் பத்திரமாகவும் இருக்க வேண்டும். அதே, சமயம் அது நியாயமான வளர்ச்சியடைய வேண்டும். பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று நினைத்து நமது வீட்டு இரும்பு பெட்டியில் வைத்துப் பூட்டி வைத்து விட்டால், பணம் பத்திரமாக இருக்கும். ஆனால், அது நமக்காக வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கும். சேமித்த பணத்தை சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும்.
நம் சேமிப்பின் எதிர்பார்ப்புகள் என்ன?
நாம் சேமித்து வைத்துள்ள பணத்தை எதில் முதலீடு செய்தாலும் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1) முதலுக்கு மோசம் இல்லையா?(Safety first)
2) முதலுக்கு வருமானம் எவ்வளவு வரும்.(Returns)
3) ஒரு அவசரத்திற்கு போட்ட முதலை திரும்ப எடுக்க முடியுமா?(Liquidity)
உதாரணத்திற்கு ஒரு இடத்தை நாம் வாங்குகிறோம் என்றால், இன்று அந்த இடத்தின் மதிப்பு 10,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். பத்து வருடம் கழித்து அதன் மதிப்பு 10 லட்சமாக அல்லது அதற்கும் மேலாக உயர்ந்து இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் இடத்தை விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம். இதேபோல் சரியான பாதையில் நம் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அப்பொழுது தான், நாம் தூங்கினாலும் நம் பணம் நமக்காக வேலை செய்து கொண்டிருக்கும்.
முன்எச்சரிக்கை :
நமது பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பே, நாம் செய்ய வேண்டியது.
- நம் வாங்க கூடிய இடத்தின் மதிப்பை முதலில் ஆராய வேண்டும்.இன்றைய மதிப்பில் 10 ஆயிரம் ரூபாய் உள்ளது, காலம் செல்ல செல்ல இதன் மதிப்பு அதிகரிக்குமா, அல்லது குறையுமா, என்பதை தெளிவாக ஆராய்ந்து முடிவு எடுத்து பின்பு அதில் முதலீடு செய்ய வேண்டும். இப்படி ஆராய்ந்து முதலீடு செய்தால் மட்டுமே அடிபடாமல் நிறைய சம்பாதிக்க முடியும்.
உதாரணத்திற்கு, நாம் இப்பொழுது தங்கத்தில் முதலீடு செய்து கொள்வதாக வைத்துக் கொள்ளலாம். 1958 தங்கம் விலை சவரனுக்கு 100 ரூபாய். 2022 தங்கம் விலை சவரனுக்கு 3700 ரூபாய். 1958 இல் பத்தாயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால் இப்பொழுது அதன் மதிப்பை நீங்களே கணக்குப் போட்டு பாருங்கள் எவ்வளவு லாபம் என்று.
இடைப்பட்ட தருணத்தில் எப்பொழுது விற்றாலும் சரியான லாபம் கிடைத்திருக்கும். தங்க பொருளை வாங்குவதற்கு ஆட்களும் அதிகம் இருக்கிறார்கள். நிலம், தங்கம், வங்கியில் வைப்பு, வட்டிக்கு கொடுத்து வாங்குதல், வியாபாரத்தில் போடுதல் என்று பலவிதமாக முதலீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கும் மேல் வேறு வாய்ப்புகள் என்ன உள்ளது என்று பார்க்கும் பொழுது. சரியாக புரிந்து முதலீடு செய்தால், நல்ல வளர்ச்சி கொடுக்கக் கூடியவை பங்குகள் (ஷேர்கள்) என்று சொல்லலாம்.
பங்குச்சந்தை :
பங்குச்சந்தையை புரிந்துகொள்வது கஷ்டமான விஷயம் என்று நினைத்து நிறைய பேர் ஒதுங்கி விடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில், பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் கூட பங்குச்சந்தையை பற்றி எந்தவொரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
பங்கு வாங்குவது என்பது ஒரு நிலத்தையோ, வீட்டையோ, வாங்குவது போல தான். ஒரு வீட்டை வாங்கும் பொழுது நாம் என்னென்ன விஷயங்களை கவனிப்போம், அந்த வீட்டின் சொந்தக்காரர்களிடம் என்னென்ன விஷயங்கள் கேட்டு தெரிந்து கொள்வோம்?
அலசியாரைவது :
செங்கல் வைத்து கட்டப்பட்டிருக்கிறதா, ஆலப்புலாவைத்து கட்டப்பட்டிருக்கிறதா, டைல்ஸ் என்ன வகையானது, ஜன்னல்கள், கதவுகள், எந்த மரத்தை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீடு முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறதா, ஏதும் குறைகள் இருக்கிறதா, வெளிச்சம் காற்று சரிவர கிடைக்கிறதா வீட்டின் அருகாமையில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, பேருந்து நிலையம் வங்கிகள் இன்னும் பல என்று தெளிவாக பார்த்த பின்புதான் அந்த வீட்டை நாம் வாங்குவோம், காரணம் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கிறதா என்று பார்த்து தான் வாங்குவோம். இதேபோல, பக்கத்து தெருவில் அல்லது பக்கத்து ஊரில் ஒரு வீடு கிடைக்கிறது, எல்லா சலுகைகளும் அங்கு கிடைக்கிறது என்றால், இந்த வீட்டை விட்டுவிட்டு அந்த வீட்டுக்கு தான் நாம் செல்வோம். ஏனென்றால் நாளை நம் வீட்டை விற்பனை செய்ய நினைக்கும் பொழுது நாம் வாங்கிய விலையிலிருந்து அதிகமாகவே விற்கலாம். இதை போல தான் ஒரு இடத்தை அதாவது ஒரு நிலத்தை வாங்கும் பொழுதும், நிலத்தில் ஏதும் வில்லங்கம் இல்லையா, இப்பொழுது நாம் வாங்கும் விலை சரியான விலைதான், சற்று காலத்தில் இன்னும் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா, இல்லை அதிகரிக்குமா, ஐந்து வருடம் கழித்து வாங்கியதிலிருந்து லாபம் அதிகரிக்குமா? இல்லையா.
பன்முக சிந்தனை:
இப்படி நாம் வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருளையும் நாம் பன்முக சிந்தனைகளோடு யோசித்து வாங்குவோம். இதற்கு நிறைய நேரமும் செலவிடுவோம். அதைப் போலத்தான் ஒரு பங்கினை வாங்கும் முன்பு, அதன் மதிப்பை பன்முக கோணங்களில் அலசி ஆராய்ந்து. இன்னும் சற்று காலங்கள், இந்த பங்குகளுக்கு மார்க்கெட்டில் மவுஸ் இருக்கிறதா, இல்லையா, என்று நிதானமாக சிந்தித்து, ஆராய்ந்து, அந்த பங்கில் நமது முதலீடு செலுத்தவேண்டும்.
நாம் பங்கினை ஆராய்ந்து கொண்டு, நிதானமாக சிந்தித்து கொண்டிருக்கும் பொழுது, பங்கின் விலை வேகமாக ஏறும். யோசிக்கும் முன்பு பங்கின் விலை வேகமாக ஏறுகிறது, என்று முதலீடு செய்துவிட்டு திரும்பி பார்க்கும் முன்பு, சரசரவென்று இறங்கி விடும். ஜான் ஏறினால், முழம் சறுக்கும் என்பார்கள். அது போல் ஆகிவிடும்.பங்குச்சந்தைக்கு தேவை நிதானம்; முதலீடு செய்த பின்பு பொறுமை அவசியம்.
Tags: Business news in Tamil , share market news in tamil