உலகின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது.
உற்பத்தி :
இந்தியா முழுவதும் அதிகமான மற்றும் தரமான சுண்ணாம்புக்கல் கிடைப்பதால் சிமெண்ட் உற்பத்தி மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிமெண்ட் தேவைகள் :
வீடு, வணிகம், கட்டுமானம் மற்றும் தொழில் துறை கட்டுமானம் போன்றவற்றின் தேவைகள் அதிகரித்து வருவதால் நிதியாண்டில் 27க்குள் சிமெண்டு தொழிலின் தேவை ஆண்டுக்கு 419.92 மெட்ரிக் டன்னாக (MTPA)உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த சிமெண்ட் உற்பத்தியில் பிப்ரவரி 2020 உடன் ஒப்பிடும் பொழுது பிப்ரவரி 2021ல் இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தி 7.8% அதிகரித்துள்ளது. அதாவது, நிதி ஆண்டு 2021ல், 294.4(MT) மில்லியன் டன்னாகவும், நிதி ஆண்டு 2020இல் 329 மில்லியன் டன்னாகவும் இருந்தது. நிதியாண்டு 2022 65% சிமெண்ட்டின் பயன்பாடு எதிர்பார்க்கப்படுகிறது. சிமெண்ட் உற்பத்தி 10% முதல் 12% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ICRA :
ICRA : ICRA அறிவிப்பின்படி, கிராமப்புற வீட்டு தேவை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசாங்கத்தின் வலுவான கவனம் ஆகியவற்றால், நிதியாண்டு 2022 இல் இந்தியாவில் சிமெண்டு உற்பத்தி ஆண்டுக்கு தோராயமாக 12% அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
Crisil :
CRISIL அறிவிப்பின்படி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கான செலவினங்கள் அதிகரிப்பதன் காரணத்தால், நிதியாண்டில் 2024 க்குள் தோராயமாக 80 மில்லியன் டன் அதிகரிக்கும் என்று கூறினர்.
மேலும், நிதியாண்டு 2023 இன் யூனியன் பட்ஜெட் விவரத்தின் படி, உட்கட்டமைப்புக்கான அதிக ஒதுக்கீடு, சாலைகள் பராமரிப்பிற்கு, 26.75 பில்லியன் அமெரிக்க டாலர்கள், ரயில்வே துறை பராமரிப்பிற்கு 18.84 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் சிமெண்டின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
புதிய திட்டங்கள் :
பல அரசாங்க திட்டங்கள் மற்றும் மாநில அளவிலான திட்டங்களான MGNREGA, PM Garib Kalyan Rozgar abhiyan, Matir Srisht போன்ற திட்டங்கள் மூலமாகவும் சிமெண்டின் விலை அதிகரிக்க செய்கின்றன.
இந்தியாவில் உலகம் தரம் வாய்ந்த தங்குதடையற்ற மல்டி மாடல் போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், அக்டோபர் 2021ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி, மல்டி மாடல் இணைப்புக்கான பிஎம் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான் ( PM GATI SHAKTI- NATIONAL MASTER PLAN ) தொடங்கி வைத்தார்.
இது எதிர்காலத்தில் சிமெண்டு தேவையை அதிகரிக்க செய்யும்.
இந்தியாவில் சிமெண்ட் துறை வளர்ச்சியில் மேம்படுத்த தேவையே காண்கிறது.
Cement Sector :
நிதியாண்டு 2021ல், CLSA கவர்ஏஜ் பங்குகளுக்கான சிமெண்ட் சந்தையில் EBITDA ல் 14% ஆண்டு அதிகரிப்பை எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணம், Acc, Dalmia, ultratech போன்ற சிமெண்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட முக்கிய தகவல், நிதியாண்டு 2021ன் இரண்டாவது காலாண்டில் இந்திய சிமெண்ட் நிறுவனங்கள் வருவாய் மற்றும் தொழில் துறைக்கான தேவைகள் அதிகரித்தது. கிராமப்புற மீட்சியால் உந்தப்பட்டு, கிராமப்புற சந்தைகளில் இயல்பு நிலைக்கு வருவதால் சிமெண்ட்இன் தேவை அதிகரித்துள்ளது.
சிமெண்ட் ஆலைகள் :
நாட்டில் மொத்தம் 210 பெரிய சிமெண்ட் ஆலைகள் 410 மெட்ரிக் டன் நிறுவப்பட்ட கொள்ளளவை கொண்டுள்ளது. அதேசமயம் 350 மினி சிமெண்ட் ஆலைகள் மீதமுள்ளவை. இந்தியாவில் உள்ள மொத்த 710 பெரிய சிமெண்ட் ஆலைகளில் 707 ஆலைகள் ஆந்திரப் பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளன. நிதியாண்டு 2020 இல் இந்தியாவில் சிமெண்ட் விற்பனை 63,771 கோடி ரூபாயாக இருந்தது.
DPIIT:
DPIIT: வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 2000 செப்டம்பர் 2021 க்கு இடையில் சிமெண்ட் மற்றும் ஜிப்சம் தயாரிப்புகள் 5.24 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டை(FDI) ஈர்த்துள்ளனர்.
DGCIS:
DGCIS: தகவலின்படி, இந்தியாவில் போர்ட்லேண்ட் சிமெண்ட், அலுமினியஸ் சிமெண்ட், ஸ்லாக் சிமெண்ட், சூப்பர் சல்பேட் சிமெண்ட் இவைபோன்ற ஹைட்ராலிக் சிமெண்ட்களின் ஏற்றுமதி, நிதியாண்டில் 2021ல், 118.15 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு இந்தியா சிமெண்ட் ஏற்றுமதி செய்தது. இதுமட்டுமின்றி, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், உட்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறது. மற்றும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதே இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும், போக்குவரத்தை எளிதாக போவதற்கும், போக்குவரத்து செலவை குறைப்பதற்கும் ரயில்வேயின் திறன் மேம்படுவதற்கும், கையாளுதல் மற்றும் சேமிப்பிற்கான வசதிகளை வெளிப்படுத்தவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக கட்டுமானப் பணிகள் அதிகரிக்க வழிவகுக்கும், இதன்மூலம் சிமெண்டின் தேவையும் அதிகரிக்கும். மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 13 ஆயிரத்து 750 கோடி (1.88 பில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 12,794 கோடி (1.68 பில்லியன் அமெரிக்க டாலர்) நகரப்புற புத்துயிர் இயக்கமான அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி மிஷின், ஸ்வச் பாரத் மிஷன், மத்திய பட்ஜெட் நிதியாண்டு 2023 இன் படி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாற்பத்தி எட்டு ஆயிரம் (48000) கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.